Breaking News
இந்திய பிரதமர் மோடி இலங்கை வர உத்தேசம்; ஜெய்ஷங்கர்
.

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (10) டில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.