மண்டைதீவு கடல் படுகொலை! - இலங்கைக் கடற்படையினரால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலை.
கடற்படையினரின் கருப்பு உடை அணிந்து கடல்றோந்தில் ஈடபட்டுக் கொண்டிருந்த குழுவே இந்தப் படுகொலையைச் செய்தது .
மண்டைதீவு கடல் படுகொலை!
யாழ்ப்பாணக் குடாநாட்டின் மண்டைதீவுக் கரையோரப் பகுதியில் இலங்கைக் கடற்படையினரால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலையாகும். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குருநகர் மீனவர்கள் 33 பேர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
மண்டைதீவு என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்துள்ள ஒரு தீவு மற்றும் யாழ்ப்பாண நகரத்துடன் தரைப்பாலத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
10 ஜூன் 1986 அன்று, இலங்கை கடற்படையினரின் கருப்பு உடை அணிந்து கடல்றோந்தில் ஈடபட்டுக் கொண்டிருந்த குழுவே, கடலில் இருந்த மீனவர்களை அணுகினர். மீனவர்கள் தாங்கள் பொதுமக்கள் என்று கைகளை உயர்த்தினார்கள். எனினும் கடற்படையினர் மீனவர்களை தாக்கி அவர்களது படகுகள் மற்றும் வலைகளை அழித்துள்ளனர். மீனவர்கள் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். சில மீனவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. சில மீனவர்களின் வயிறு வெட்டப்பட்டது. குருநகரைச் சேர்ந்த 32 மீனவர்களும் மண்டைதீவு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையில் மரணத்திலிருந்து தப்பிய ஒரே மீனவர் திரு.செமன் மரியதாஸ் (41) இன்னும் உயிருடன் இருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட மீனவர்கள் 13 மற்றும் 62 வயதுக்குட்பட்டவர்கள். விசாரணையின் போது மருத்துவ சான்றுகளின்படிஇ அனைத்து மீனவர்களும் இயந்திர துப்பாக்கிச் சூடு காரணமாக உடற்கூறின் பல்வேறு பகுதிகளில் பல காயங்களால் இறந்துள்ளனர்.
ஜூன் 10 தீபகற்பத்தில் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் 18 வது ஆண்டு நினைவு தினத்தன்று, இறந்தவர்களின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது. இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு 'இராணுவ நடவடிக்கையின்' போது இலங்கை இராணுவத்தால் அத்தகைய நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டது.