உலகின் முதல் பறக்கும் கார்: சீனா அறிமுகம்:
.

இன்றைய சூழலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் செல்வதற்குள் போதும்போதும் என்ற நிலைக்கு சென்றுவிடுகிறோம். காரணம், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நெரிசல் அதிகரித்து, பயணத்தை தாமதப்படுத்துவதுடன், சலிப்படைய செய்கிறது. பயணத்தை எளிதாக்கும் வகையில், பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன.
அந்த போட்டியில் தற்போது சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான ‘எக்ஸ்பெங்’, உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது.
இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றிப்பெற்றது. ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தில், கார் போன்ற வடிவத்தில் இந்த பறக்கும் இந்த காருக்கு எக்ஸ்பெங், ‘எக்ஸ்2’ என பெயரிடப்பட்டுள்ளது. 5.172 மீட்டர் நீளமும், 5.124 மீட்டர் அகலமும், 1.362 மீட்டர் உயரமும் கொண்ட இந்த கார், 680 கிலோ எடைக்கொண்டது. அதிகபட்சம் 160 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது