Breaking News
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி
‘நியாயம் கிடைக்கும் வரை விழிப்பாய் இருப்போம்’

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி
‘நியாயம் கிடைக்கும் வரை விழிப்பாய் இருப்போம்’ எனும் கருப்பொருளில் கிறிஸ்தவ எழுச்சி அமைப்பினர் நடைபவனி ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் சனிக்கிழமை (20) மாலை திருப்பலி கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு எழுச்சி நடைபவனி ஆரம்பமாகி முகத்துவாரம் புனித ஜேம்ஸ் தேவாலயம் ஊடாக வத்தளை, கந்தானை ஊடாக துடெல்ல, ஜா எல, சீதுவ, குரண வழியாக நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தை சென்றடையும்.