Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நாடாளுமன்றிற்கு எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் பூதவுடல்: இறுதி கிரியைகள் விபரம் வருமாறு

.

 

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தனின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்துக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00மணிமுதல் மாலை 04.00மணிவரை பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி கிரியைகள்

இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

அன்னாரது பூதவுடல் பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் மக்கள் அஞ்சலிக்காக நாளை(02) வைக்கப்படவுள்ளது.

நாளை (02) நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ள நிலையில், நாளை மறுதினம் (03) நாடாளுமன்றம் கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.