Breaking News
இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்...
ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படம்.

ஈழக்கூத்தன் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படமும்.
IBC வானொலியின் நிறுவகர் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படமும். மைய நீரோட்ட வாசகர்களின் கவனத்தை ஈப்பதற்காக “IBC வானொலியின் நிறுவகர்” எனக் குறிப்பிட்டேன். உண்மையில், ஈழக்கூத்தன் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் முக்கியத்துவமும், கலைப்பணியும், சமூகப்பணியும் இதைவிடப் பன்மடங்காகும்.
“கலைக்காக இல்லை; அது மக்களுக்கானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க முடியாது போனால் ஒரு கலைஞன் கலைஞனாக இருக்க முடியாது” என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு சமூகப் போராளியாக தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து தமிழ்த்தேசியக் கலைஞனாக, சிந்தனையாளனாக உயர்ந்து நிற்கும் மாபெரும் கலைஞன்; பல நூறு நாடகர்களின் ஆசான். இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்...
மே 5 சுவிஸ் இலும், மே 10 இலண்டனிலும் வெளியிடப்படுகிறது.