Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நாடாளுமன்றத்தையும் கலைக்க உத்தேசம்; மிகப் பெரிய பிரளயங்கள் உருவாகும்

.

ஜனாதிபதித் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் 50 இற்கும் அதிகமான எம்.பிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தலுடன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான கோரிக்கையையும் சில எம்.பிகள் முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மையை பெற முடியாததொரு சூழ்நிலை ஏற்படலாம்.

அதனால் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கூட்டணி அரசாங்கமொன்றை அமைக்கலாம் என குறித்த எம்.பிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் ரணில் விக்ரமவிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்புகளின் போதும் நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை பசில் முன்வைத்திருந்தார்.

என்றாலும், ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார். ஆனால், தற்போது அரசியல் ரீதியாக நெருக்கடியான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை ரணில் விக்ரமசிங்க எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி பல செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் நிபந்தனைகளை ஏற்குமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அக்கட்சி விடுத்திருந்த காலக்கெடு இன்று 25ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. கடந்த வாரம் எதிர்வரும் 26ஆம் திகதி தமது வேட்பாளரை அறிவிப்பதாக பொதுஜன பெரமுன அறிவித்திருந்தது.

மகிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்றும் இவ்வார இறுதியில் இடம்பெற உள்ளது. அந்த சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட அதிகளவான வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஆனால், இன்றுவரை ரணில் விக்ரமசிங்கவுடன் அக்கட்சிக்கு எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. என்பதால் அக்கட்சியின் தீர்மானம் என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

என்றாலும், பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான எம்.பிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். இதனை அவர்கள் நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரமும் அடுத்த வாரமும் இலங்கை அரசியலில் மிகப் பெரிய பிரளயங்கள் உருவாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடியும் முடியும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.