Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பிரிஸ்பேர்னில் இன்று நூல் வெளியீடும் இலக்கிய அரங்கும்

.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் அனுசரணையில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடும் இலக்கிய அரங்கும் பிரிஸ்பேர்ன் (Brisbane) மாநகரில் இன்று ஞாயிறு ஆகஸ்ட் 4ம் திகதி நடைபெற உள்ளது.

பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகியஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு  பிரிஸ்பேர்னில் உள்ள மவுண்ட் ஒமாணி நூலக மண்டபத்தில் நடைபெற உள்ளது.

(Mt Ommaney Library, Mt Ommaney Shopping Centre, 171 Dandenong Road, Mt Ommaney, Brisbane, Queensland)

இன்று ஞாயிற்றுக்கிழமை 15.30 முதல் 17.30 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் ‘தாமரைச் செல்வி’ திருமதி. ரதிதேவி கந்தசாமி அவர்கள் வழங்குவார். அத்துடன் தமிழ் வாழ்த்துப் பாடலை பிரிஸ்பேர்ன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் பாடவுள்ளனர்.

இந்நிகழ்வின் தலைமையுரையை அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் மூத்த செயற்பாட்டாளர் திரு. செந்தில் குமரன் அவர்கள் ஆற்றுவார். பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை திரு. சிவா கைலாசம் நிகழ்த்துவார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை டாக்டர். துஷ்யந்தன் திசைநாயகம் அவர்கள் ஆற்றுவார்.

இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை திரு. ரஜினிகாந்த் ஜெயராமன் அவர்கள் ஆற்றுவார்.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், குயின்ஸ்லாந்து கிளையின் அனுசரணையில் நடைபெறும் நூல் வெளியீடும் இலக்கிய அரங்கின் ஏற்புரையை திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.