Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த நாமல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம். இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம். இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது. தேர்தல் ​வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும். அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள். தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்” என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.