Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பலாலி விமானப்படை முகாமில் சஜித்தின் மனைவிக்கு ஆயுத வணக்கமா?; வெடித்தது சர்ச்சை

.

பலாலியில் உள்ள விமானப்படை முகாமிற்குள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச நுழையும் போது விமானப்படை வீரர்களால் ஆயுத வணக்கம் செலுத்தியதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய இராணுவ மரியாதை செலுத்தும் முறைக்கமைய, துப்பாக்கி செங்குத்தாக உடலுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு பொதுவாக தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செலுத்தப்படுகின்றது.

இந்நிலையில் ​​ஜலனி பிரேமதாசவுடன் சென்ற குழுவில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிற்காகவே இந்த மரியாதை செலுத்தப்பட்டது எனவும் வேறு எந்த நபருக்கும் செலுத்தப்படவில்லை எனவும் விமானப்படையின் பேச்சாளர் எரந்த கீகனகே குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குழுவிற்கு ஜலனி பிரேமதாச தலைமை தாங்கினார் என்பதும் அவருக்குப் பின்னால் ஜி.எல்.பீரிஸ் நடந்து செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

அதன் பின்னர் பலாலி முகாமில் பிரதம அதிதியாக ஜலனி கலந்து கொண்டு வரவேற்று அவர் சால்வை போர்த்தப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளார்.

இந்த காணொளி முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷினால் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

எனினும் குறித்த சம்பவத்தினை உமாச்சந்திரா பிரகாஷ், எடிட் செய்து பேஸ்புக்கில் பதிவு செய்ததாக தெரியவந்துள்ளது.