புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள். 29.04.1986.
1960 ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 16ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த சிங்காரவேல் செல்வகுமார் என்ற புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள் இன்றாகும்.

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள் 29.04.1986.
1960 ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 16ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த சிங்காரவேல் செல்வகுமார் என்ற புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லிங்கம் அவர்களது 38 வது நினைவேந்தல் நாள் இன்றாகும்.
சிங்காரவேல் செல்வகுமார் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகி, 1980 ஆம் ஆண்டு தனது 20 தாவது வயதில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராக செயல்பட ஆரம்பித்தார். தன்னை முழு நேர உறுப்பினராக 1981 ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டு அதே ஆண்டில் இராணுவப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். தான் இணைந்து கொண்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் முதல் தளபதியான ஆசீர் என்ற லூக்காஸ் சாள்ஸ் அன்ரனியின் தலைமையிலும், சாள்ஸ் அன்ரனி காயமடைந்து இருந்த காலத்தில் அவர் பின்னர் தாக்குதல் தளபதியாக இருந்த சங்கர் சத்தியநாதன் தலைமையிலும், அத்தோடு 1983 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற திருநெல்வேலி தாக்குதலில் செல்லக்கிளி அம்மான் தலைமையிலும் செயல்பட்டார்.
அதன் பின்னர் தாக்குதல் தளபதியான சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டுவின் தலைமையிலும், நடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறுபட்ட தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்தவராவர். அத்தோடு இந்திய ஆயுதப் படைகளால் உத்தர பிரதேசத்தில் பொன்னம்மான் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மூத்த போராளிகளான புலேந்தி அம்மான், விக்டர், கிட்டு, ராஜேஸ்,கணேஸ், அருணா, சுப்பண்ணா,யோகன் பாதர்,பொட்டு அம்மானுடன் லிங்கமும் ஒரு அணித்தலைவராக இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழ் நாடு வந்து 1984ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றிய அவர் தமிழக மக்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.
ஆரம்ப காலங்களில் தேசியத்தலைவரின் உதவியாளராகவும், மெய்பாதுகாவலராகவும் விளங்கிய லிங்கம் அவர்கள் தேசியத் தலைவரால் நேசிக்கப்பட்ட ஒருவருமாவர் என்பதோடு 1985 ஆம் ஆண்டின் இறுதியில் தளம் திரும்பிய லிங்கம் அவர்கள், சக போராளிகள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகினார் என்பதோடு இயக்கம் இராணுவச்சீருடை அணியாத காலத்திலும் இராணுவச்சீருடைக்கு ஒத்த உடையணிந்து கம்பீரமாகவே காட்சியளிப்பார். கடமையில் கண்டிப்பானவரானாலும் அவர் எல்லோருடனும் பழகும் எளிமையான தன்மையினானல் அவர் மீது மற்றைய இளம் போராளிகள் அனைவரும் பேரன்பு கொண்டிருந்தனர். இப்படியான மரியாதைகுரிய மூத்த போரளி லிங்கம் அவர்கள் 29 ஆம் திகதி 04 ஆம் மாதம் 1986 ஆம் ஆண்டு சங்கரத்தை சந்திக்கு அருகாமையில் உள்ள டெலோ முகாமின் வாயிலில் டெலோ இயக்கதினரால் கொல்லப்பட்டார்.
அவருக்கு எனது வீரவணக்கத்தை பதிவு செய்து, இந்த லிங்கத்தை டெலோ இயக்கம் கொன்றதன் காரணமாக அதி உக்கிரம் அடைந்த டெலோ மற்றும் புலிகளுக்கு இடையிலான மோதல், டெலோ இயக்க தலைவர். சிறீ சபாரத்தினத்திற்கு, 1986 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 6 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட மரண தண்டனையை அடுத்து முடிவுக்கு வந்தது.