Breaking News
தேசிய விருது வரலாறு... அதிக முறை வென்ற நடிகர்கள், இசையமைப்பாளர்கள் யார் தெரியுமா?
.
70th National Film Awards: 70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், தேசிய விருதுகள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு!
70வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று (அக்.08) மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு அறிவிக்கபட்ட தேசிய விருதில் தமிழ் மொழியில் திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன் 1 ஆகிய படங்கள் தேசிய விருதை வென்றுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்திற்காக இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோரும், திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடன இயக்குநர் சதிஷும் இன்று விருதுகள் பெறுகின்றனர். இவர்களுக்கு இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய விருது வழங்குகிறார். இந்நிலையில் தேசிய விருது எப்போது முதல் வழங்கப்படுகிறது, எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது, அதிக முறை வென்றவர்கள் யார் உள்ளிட்ட சிறப்பு தகவல்களை தற்போது காணலாம்.
- தேசிய திரைப்பட விருதுகள் (National film awards) 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
- மத்திய அரசின் திரைப்பட விழா அமைப்பின் மேற்பார்வையில் கடந்த 1973ஆம் ஆண்டு முதல் தேசிய விருது வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது தேசிய விருதாகும்.
- தேசிய விருதுகள் Feature film, Non feature Film, Film