Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சீனாவுடன் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம்: தைவான் ஜனாதிபதி சூளூரை

.

சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என தைவானின் ஜனாதிபதி லாய் சிங் டே, சூளுரைத்துள்ளார்.

சுயாட்சியுடன் செயல்படும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அந்நாட்டை இணைத்துக் கொள்ள இராணுவப் பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என சீனாவும் எச்சரித்துள்ளது.

தைவானின் தேசிய தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி லாய் சிங் டே, “இணைப்பை எதிர்க்கும் கடப்பாட்டையும் எங்களுடைய இறையாண்மையில் நுழைவதையும் கடுமையாக எதிர்ப்போம்.” எனக் கூறியுள்ளார்.

லாய் சிங் டே, கடந்த மே மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து சீனா, பல்வேறு நெருக்கடிகளை தைவானுக்கு கொடுத்து வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி டிசாய் இங்-வென்னைவிட லாய் சிங் டே, சீனாவுக்கு எதிராக வெளிப்படையாக பேசி வருவதால் சீனா கோபமடைந்துள்ளது.

இதனால் தைவான் தேசிய தினக் கொண்டாட்டதை எதிர்க்கும் நோக்கில் சீனா இராணுவப் பயிற்சிகளை நடத்தலாம் என அமெரிக்க எச்சரித்திருந்தது. அதன் பிரகாரம் சில நகர்வுகளில் சீனாவும் ஈடுபட்டது.

தைவானின் இறையாண்மை பற்றி பேசும் லாயை ‘பிரிவினைவாதி’ என பெய்ஜிங் குறிப்பிடுவதுடன், தைவானின் தாய்நாடு சீனா அல்ல என்று லாய் கூறியதை கண்டித்துள்ள சீனா, “ லாய் சிங் டேவின் உரை விரோதத்தையும் மோதலையும் அதிகரிக்கும் தீங்கை நோக்கமாகக் கொண்டது.” என்றும் சீனா குற்றம் சுமத்தியுள்ளது.