Breaking News
சாவகச்சேரி நகராட்சிமன்றம்.
2024.05.01ஆம் திகதி முதல் 24 மணிநேரமும் கழிவுகளை ஒப்படைக்கமுடியும்: சாவகச்சேரி நகராட்சிமன்றம்.

சாவகச்சேரி நகராட்சிமன்றம்.
நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் உக்கக்கூடிய மற்றும் உக்காத கழிவுகளை சிறந்த முறையில் அகற்றுவதற்கும், அதனை நகரசபையானது சிறப்பாக முகாமை செய்வதற்கும் ஏற்றவகையில் எமது வளநிலையத்தில் நிறகுப்பைக்கூடைகள் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வள நிலையத்தில் 2024.05.01ஆம் திகதி முதல் வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் கழிவுகளை ஒப்படைக்கமுடியும்.
பச்சை – உக்கக்கூடிய கழிவுகள்
செம்மஞ்சள் - பிளாஸ்ரிக் கழிவுகள்
நீலம் - கடதாசிக் கழிவுகள்
சிவப்பு – கண்ணாடிக் கழிவுகள்
கபிலம் - உலோகக் கழிவுகள்
சாம்பல் - இலத்திரனியல் கழிவுகள்
மஞ்சள் - தொற்றுக்கழிவுகள் (பம்பஸ்)