Breaking News
திருகோணமலை நகரத்தில் முஸ்லிம் மக்கள்.
மலேசிய, யாவா பரம்பரையின் வழித்தோன்றல்களாக வந்த இஸ்லாமியர்கள்.

திருகோணமலை நகரத்தில் முஸ்லிம் மக்கள்.
திருகோணமலை நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் சமயம், கலை, கலாச்சாரம், என்பவற்றைப் பிரதிபலிக்கும் வகையில்,1826ஆம் ஆண்டு மொஹிதீன் ஜும்மா என்ற பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்பாகவே, அன்று சோனகத்தெரு என்றும் இன்று பள்ளிவாசல் வீதியென்றும் அழைக்கப்படும் பகுதிகளை வாழ்விடமாக்கி மலேசிய யாவா பரம்பரையின் வழித்தோன்றல்களாக வந்த பல இஸ்லாமியர்கள் தமிழர்களோடு தமிழர்களாவே வாழ்ந்தார்கள்.
அந்த வகையில் அந்த பிரதேசத்தில் சாரதா வீதியோடு சங்கமித்த தக்கையா வீதியை ஒரு பக்கமாகக் கொண்டு அமைந்திருக்கின்றது மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலின் மறுபக்கமாக தக்கையா வீதியை ஒன்றி வாழ்ந்த ஒரு இஸ்லாமியக் குடும்பமும் மற்றவர்களைப் போலவே தம்மை தமிழர்களாவே எண்ணி வாழ்ந்து வந்தது.
அந்த தமிழ் உணர்வோடு வாழ்ந்த குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவராக நூற்றாண்டு கடந்த பிறந்து, அதீத தமிழின உணர்வோடு தமிழராகவே வாழ்ந்த ரகுமான் ஜான் அவர்கள், தமிழீழ விடுதலையை இலக்காக்கி எமது திருகோணமலை மண்ணில் பல போராளிகளை உருவாக்கி, தமிழீழ விடுதலை கழகத்தில் ஸ்தாபகர்களில் ஒருவராகி “காந்தன்” என்று பெயர் கொண்டு பயணித்து அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டு குழுவில் முகுந்தன், சந்ததியார், கண்ணன், மற்றும் மூதுரை சேர்ந்த சலீமுடன் அதிகாரத்தில் இருந்த
எமது திருகோணமலை மண்ணை சேர்ந்த ரகுமான் ஜான் என்ற ஜான் மாஸ்டர் அவர்கள் உண்மையான போரளியாக தமிழீழ விடுதலைக்காக ஆற்றிய பணியை கெளரவப்படுத்தி பதிவு செய்து அந்த என் பதிவின் மூலம் தமிழீழ விடுதலைக்காய் போராடிய அந்த இஸ்லாமியப் போராளியைப் பற்றி எனது திருகோணமலை மண்ணின் உறவுகளும் வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும் உறவுகளும் அறிந்து கொள்ளவதற்குவிரைவில் பதிவாக்குகின்றேன்.
சுவாமி சங்கரானந்தா.