ஏன் மாற்றம் கேட்டும் மாறவில்லை; மாற்றம் வேண்டியோர் ஒற்றுமை காட்டவில்லை!. இது பாண் கதை அல்ல இன்றய வடக்கு கிழக்கின் அரசியல் நிலை!
.

இது பாண் கதை அல்ல இன்றய வடக்கு கிழக்கின் அரசியல் நிலை!
ஒரு கல்விக்கல்லூரி விடுதியில் உள்ள நூறு(100) மாணவர்களுக்கு கன்ரீனில் தினமும் காலை உணவாக பாண் கொடுத்துவந்தார்கள்.இதனை மாற்றவேண்டி அதாவது தோசைவேணும் என்று பலர் விரும்பினர் அவர்கள் நிர்வாகத்திற்கு சொன்னார்கள் தினமும் பாண் சாப்பிட முடியாது அதுவும் உழுத்த வண்டு போன பாண்தான் வருது ஆகவே மாற்றம் வேணும் எனவே என்னவேணும் என்று வாக்கெடுப்பு எடுக்குமாறு தோசையை மாற்றமாகவேண்டினோர். நிர்வாகத்துக்கு கூறினார்கள் நிர்வாகமும் ஒத்துக்கொண்டு,
தோசை,பாண்,இட்டலி, இடியப்பம், புட்டு, நூடில்ஸ், அப்பம், ரொட்டி; பூரி, கடலை இவற்றில் எது வேணும் என வாக்கெடுப்பு நடாத்தினார்கள் .அடுத்த நாள் காலை உணவாக, மீண்டும் அதே உழுத்த பாண் மாணவர்களுக்கு உணவாக வந்தது தோசை விரும்பிகள் போய் என்ன இது அநியாயம் என நிர்வாகத்திடம் கேட்டபோது, வாக்குகள் காட்டப்பட்டது.
தோசை :-25, பாண் :-30, இட்லி :-10, இடியப்பம்:- 05, புட்டு :-05, நூடில்ஸ் :-05, அப்பம்:- 05, ரொட்டி 05, பூரி 05, கடலை 05
ஏன் மாற்றம் கேட்டும் மாறவில்லை என்றால் காரணம் மாற்றம் வேண்டியோர் ஒற்றுமையுடன் அவர்கள் கேட்ட தோசைக்கி போடவில்லை ஆனால் பாண் வேண்டியோர் அனைவரும் ஒன்றாக பாணுக்கே போட்டார்கள் 70 பேரால் வெறுக்கப்பட்ட பாண் வெறும் 30 பேரின் ஒற்றுமையால் வென்றது. பெரும்பான்மை உழுத்த பாணை எதிர்த்தாலும் எதிர்ப்பில் ஒற்றுமை காட்டவில்லை! பிரித்து பிரித்து வாக்கு போட்டார்கள் பாண் எதிர்ப்பு 70 வாக்குகளும் புட்டு இட்டலி தோசை இடியப்பம் நூடில்ஸ் கடலை எனப்பிரிந்து நாம் கூறவருவது புரிகிறதா. இது பாண் கதையோ அல்லது கன்ரீன் கதையோ அல்ல மாறாக இன்றய அதுவும் வடக்கு கிழக்கின் அரசியல் நிலை.அங்கு எப்படி வாக்குகள் இடியப்பம் புட்டு இட்டலி தோசை பூரி கடலை நூடில்ஸ் க்கு போல் பிரிந்ததோ இங்கும் பல கட்சிகள் ஒற்றுமமை இல்லாது போனால் இங்கும் பிரிந்து மீண்டும் எம் விருப்பம் அதுவல்ல ஆனால் அதே உழுத்தபாண் வந்தது போல் அதே ஊழல் வாதி மீண்டும் வரவும் வாய்ப்புண்டு .
சிந்தித்து செயலாற்றுவோம்.