Breaking News
ஜானகி முன் குற்ற உணர்ச்சியால் கலங்கி நின்ற வைரமுத்து!
.

ஜானகி முன் குற்ற உணர்ச்சியால் கலங்கி நின்ற வைரமுத்து! வாழ்க்கையை திருப்பி போட்டதா இந்த பாடலில் ஒற்றை வார்த்தை?
இதுபோல் வைரமுத்து எழுதிய ஒரு பாடலில் இடம்பெற்ற வார்த்தையை நீக்கிவிடுமாறு ஜானகி கேட்டும் அதை வைரமுத்து நீக்க மறுத்து, பின்னர் குற்ற உணர்ச்சியால் அவர் முன் கலங்கி நின்றதாக கூறியுள்ளார். இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதல் ஓவியம்'. இந்த படத்தில், கண்ணன் ஹீரோவாக நடிக்க, ராதா கதாநாயகியாக நடித்திருந்தார். உணர்வு பூர்வமான காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், வைரமுத்து மொத்தம் 6 பாடல்களை எழுதி இருந்தார் . அதில் ஜானகி "நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே... உந்தன் ராஜராகம் பாடும் நேரம்" என்கிற பாடலை சோலோவாக பாடி இருந்தார். இந்த பாடலில், "அமுதகானம் நீதரும் நேரம்... நதிகள் ஜதிகள் பாடுமே... விலகிப் போனால் எனது சலங்கை விதவையாகி போகுமே" என்கிற வரி இடம்பெற்றிருந்தது. இதில் விதவை என்கிற வார்த்தையை மட்டும் நீக்க முடியுமா என பலமுறை ஜானகி கேட்டும், படத்தின் கதைக்கு இந்த வரிகள் ஒத்து போவதால் இந்த வரியை நீக்க முடியாது என கண்டிப்பாக கூறி விட்டாராம். பின்னர் இந்த பாடலை அவர் பாடிய சில தினங்களையே ஜானகியின் கணவர் இறந்துபோய் உள்ளார்.