Breaking News
ஆசிய நாடொன்றை புரட்டிப்போட்ட புயல்! 126 பேர் பலி..பலர் மாயம்
.

பிலிப்பைன்ஸ் நாட்டை ட்ராமி புயல் தாக்கியதில் 126 பேர் பலியாகினர்.
ட்ராமி புயல்
வடமேற்கு பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை ட்ராமி புயல் தாக்கியது. இதனால் பாரிய அளவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 126 பேர் பலியானதாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டசன் கணக்கான பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற அவசரகால பணியாளர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புயலின் பாதையில் இருந்தனர்.
இதில் கிட்டத்தட்ட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல மாகாணங்களில் உள்ள 6,300க்கும் மேற்பட்ட அவசரகால முகாம்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.