Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பியின் தலையீடுகள் அதிகரிப்பு? முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்

.

வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரிக்கின்றன என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் தனது பொறுப்புக்களை ஏற்றகையோடு வடக்கு மாகாண ஆளுநருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார் என்ற செய்தியை ஜே.வி.பி. கட்சியினரே நேரடியாகச் சென்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

அரச பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் ஜனாதிபதியின் வரவை உறுதிப்படுத்த வேண்டியது ஜனாதிபதி செயலகத்தினரா? அல்லது அவர் சார்ந்த கட்சியினரா? என்ற ஒரு கேள்வியை விரிவுரையாளர் பலரும் முன்வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையினுடைய தலைவர் தெரிவிலும் ஜே.வி.பியின் தலையீடு காணப்படுகின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு அரச நிர்வாக சேவைக்குள் ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலையீடு அதிகரித்துக் காணப்படுகின்றது என்றும்,

ஊழலை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிப்பீடம் ஏறிய அநுரகுமார திஸாநாயக்க, அரச நிர்வாகத்துக்குள் கட்சி முக்கியஸ்தர்கள் தலையிடுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்ற கேள்வியைப் பலரும் எழுப்பி வருகின்றனர்.