Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈழத் தமிழர் படுகொலை.., 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் பேசிய ஆங்கில வார்த்தை. I am not intrested

.

ஈழத் தமிழர் இனப்படுகொலைக்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடிகர் விஜயிடம் கையெழுத்து கேட்ட போது அவர் பேசிய வார்த்தை பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் நேற்று விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், 2011-ம் ஆண்டில் நடந்த நடிகர் விஜய் தொடர்பான நிகழ்வு ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, 2011-ம் ஆண்டில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை பெற்று தர வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

அப்போது, இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்கே செல்வமணி, நடிகை ரோஜா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கையெழுத்திட்டனர்.

அதேபோல, நடிகர் விஜயிடம் கையெழுத்து வாங்குவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோர் படப்பிடிப்பு தளம் ஒன்றிற்கு சென்றனர். ஆனால், I am not intrested எனக்கூறி கையெழுத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பின்னர், நடிகர் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரையும் தொடர்பு கொண்டு கையெழுத்து கேட்டபோது அவரும் மறுத்துள்ளார்.

அந்த நேரத்தில் தொலைக்காட்சி சேனல்களுக்கு வன்னி அரசு அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.