Breaking News
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலை அறுத்திடுவென் யான் .....
“புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்”
வெளிநாடு செல்லும் பிள்ளைகளை கட்டி அணைத்து கதறி அழும் பெற்றோர்களுக்கும் களமுனைக்கு போராட அனுப்பிய பெற்றோர்களுக்கும் என்ன வித்தியாசம்?
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் முலை அறுத்திடுவென் யான் ..... புறநானூறு -278
களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந்தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள். “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள். கையில் வாள் ஏந்தி போர்க்களம் செல்கிறாள் இறந்து கிடந்த பிணங்களை தன் வாளினால் தட்டி தன் மகனை தேடுகிறாள் பிரண்டு கிடந்த தன் மகனை அவள் கைகலால் தொட முன்பு அவனின் உடலில் வெட்டு காயங்கள் பிற முதுகிளா அல்லது நெஞ்சு பகுதியிலா என தேடுகிறாள். பின்பு மார்பில் குத்துப்பட்டு இறந்துகிடக்கும் தன் மகனை கையில் ஏந்தி ஆனந்தம் கொள்கிறாள் தன் மகன் பிறமுதுகு காட்டவில்லை நேருக்கு நேர் போராடி செத்தான் என்று....
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும்...... புறநானூறு-227
தன் மகன் ஒரு கொடிய யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி அவள் அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமானது. அவளுடைய ஆனந்த கண்ணீர்த் துளிகள் வலிய மூங்கிலில் தொங்கிச் சொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை....
கப்டன் மில்லர் அண்ணாவின் தாயார் கூறுகிறார் தன் மகனை நினைத்து நான் கவலை அடைந்ததை விட நான் பெருமை கொள்கிறேன் என்றாள்.....புறநானூற்று வீரர்களை மட்டும் அல்ல புறநானூற்று பெற்றோர்களையும் எம் கண் முன் காட்டியதுதான் எம் விடுதலை போராட்டம்.கண் கலங்கி வெளிநாடு அனுப்பும் பெற்றோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி கள முனை அனுப்பிய பெற்றோர்களும் எம் கண்முன்னேதான் வாழ்ந்தார்கள்.