Breaking News
வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு.
பல்கலைக்கழக வாயிலிலே கவனயீர்ப்பு போராட்டம்.

வவுனியா பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு.
வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இன்று வியாழக்கிழமை (02) ஈடுபட்டதோடு பல்கலைக்கழக வாயிலிலே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.
நாடாளாவிய ரீதியில் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணி பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.