Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டே சகல அரசியல் கட்சிகளும் மே தின கூட்டத்தை நடத்தின.

எந்த மே கூட்டத்திலும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி பேசப்படவில்லை.

அநுரவின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.பழைய மாக்ஸிச கொள்கையில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி விடுபட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டே சகல அரசியல் கட்சிகளும் மே தின கூட்டத்தை நடத்தின.எந்த கூட்டத்திலும் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி பேசப்படவில்லை.கட்சியின் அரசியல் பிரச்சினைகள்,ஜனாதிபதி தேர்தல் பற்றியே கவனம் செலுத்தப்பட்டது.மே தின கூட்டத்தை நாங்கள் நடத்தவுமில்லை,எந்த கட்சிக்கு சார்பாக செல்லவுமில்லை.எமது கட்சியின் தேசிய சம்மேளம் வெகுவிரைவில் நடத்தப்படும் இதன்போது தொழிலாளரின் உரிமைகள் பற்றி விசேட திட்டங்களை முன்வைப்போம்.

சகல அரசியல் கட்சிகளும் பிரமாண்டமான முறையில் மே தின கூட்டத்தை நடத்தின.தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் மாத்திரமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.அவர்களின் கூட்டத்தில் தான் பெருமளவிலானோர் கலந்துக் கொண்டனர்.மக்கள் விடுதலை முன்னணியினர் பழைய மாக்சிசவாத கொள்கையில் இருந்து விடுபட்டு நவீன அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு அமைய செயற்பட்டால் அரசியலில் முன்னேற்றமடையலாம் என்றார்.