யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-04. இலங்கை ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.
.

கண்டி மற்றும் கரையோரங்கள் ஒன்றினைக்கப்பட்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இலங்கயினை ஒரு நாடாக பிரகடனப்படுத்தி அதனை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. இது 1848 கலவரத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது. நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.
வட மாகாணம்
தென் மாகாணம்
மேல் மாகாணம்
கிழக்கு மாகாணம்
மத்திய மாகணம்
கட்டாய இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டது. அரசின் வர்த்தக ஏகபோக உரிமை அகற்றப்பட்டது. மத்திய தர வர்க்கம் தோற்றம்.ஜோர்ஜ் வோல் என்பவர் இலங்கை சங்கத்தினை தோற்றுவித்தார்.
இலங்கயின் மத்திய தர வர்க்கத்தினரின் தோற்றமும் அவர்களின் கோரிக்கைகளும் புதிய யாப்பினை இலங்கையில் அமைக்க வழிவகுத்தது.
1827- தேவசகாய நாடகம் போன்று வேறு நாடகங்களை எழுதிய நாடகாசிரியரும்,புலவருமான முத்துக்குமார புலவர் அராலியில் மரணமடைந்தார்.ஊர் காவற்துறையில் இவர் ஓர் பாடசாலையை ஸ்தாபித்திருந்தார்.
பல தழிழ் இலக்கிய படைப்பாளியான, தென்மராச்சி மணியகாரர் மாப்பாண முதலியார் தனது ஐம்பதாவது வயதில் மரணமடைந்தார்.
1827 மே 27 -வில்லியம் ஜீல் போர்ண் யாழ்ப்பாண கலக்டராக நியமிக்கப்பட்டார்.
1828 மார்ச் 28- சந்திர கிரகணம் மட்டக்களப்பு குருமடத்தை சேர்ந்த டாக்டர் புவர்க்கும் அராலியை சேர்ந்த பிரபல சாத்திரியாரான விசுவானந்த சாத்திரியாருக்கும் இடையில் சந்திரகிரகண நிகழ்வு பற்றி பெரும் முரண்பாடு ஏற்பட்டது. சாத்திரியாரின் கணிப்பீடுகளை விட புவரின் கணிப்பீடுகள் கிரக இயக்கத்துடன் அனைத்தும் சரியாகவும் இருக்க கண்டுபிடிக்கப்பட்டது .
ஏப்ரல்- ஓர் முத்துக்குளிப்பு நிலையம் 29072-5-3 3/4 £ (பவுண்ஸ் ) பணமீட்டியது.
1828 யூலை 12 ஜோசப் பிறைஸ் யாழ்ப்பாண கலக்டராக நியமிக்கப்பட்டார்.
பாம்பன் பாலம் கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டது.
கன்னாதிட்டியை சேர்ந்த நாகலிங்கப்பத்தர் என் .எம் என்னும் ரத்தின கல், நகை கடையை ஆரம்பித்தார். முத்துகிருஸ்ணபத்தர் அதன் தற்போதைய உரிமையாளராகும்.
நாயன்மார்கட்டு வைத்திய சாலை ஆரம்பிக்கப்பட்டது.
கோட்டை கிறிஸ்டியன் கல்லூரியில் கற்பிப்பதற்காக சில யாழ்ப்பாண மாணவர்களை ஆலய சபையை சேரந்த வண.அட்லி போதகர்இ கொழும்பிற்கு அழைத்து சென்றார்.
1829 மார்ச் 18- காரை தீவு களபூமியின் 'பார்பதிகாரி' யாக மான முதலியார் ஏகாம்பரம் நியமிக்கப்பட்டார்.
ஒக்டோபர் 01 - யாழ்ப்பாண கலக்டராக பி.ஏ. டைக் நியமிக்கப்பட்டார்.
ஓர் முத்துக்குளியல் நிலையம் 37307-13-4 £ பவுண்ஸ் பணமீட்டியது.
1830 -ஓர் முத்துக்குளியல் நிலையம் 21529-19-0 £ பவுண்ட்ஸ் பணமீட்டியது.
சாயம் காய்ச்சும் ஏகபோக உரிமை நிறுத்தப்பட்டது.
மார்ச் 30- மானிப்பாயில் இருந்த அமெரிக்க சபையின் கட்டிடத்தில் தீ பிடித்தது.
யூன்01- சார்ள்ஸ் பீட்டர் லேயாட் மாஜிஸ்திரேட் ஆகவும் வரி அதிகாரியாகவும் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டார்.
ஒக்டோபர் 23- ஜெனரல் சேர் ரொபேட் வில்மொட் கோர்டன்இஇலங்கையின் கவர்னராகவும்இஇராணுவ தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
1832பெப் 01- ஆசியாவின் முதலாவது தபால் புகையிரதம் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது.
பெப்.18 கொழும்புஇ காலிஇ யாழ்ப்பாணம்இதிருமலை பகுதியில் ஓர் அபூர்வ விண்கல் தோற்றமளித்தது.
ஏப்ரல் 12- கட்டாய அரச சேவை அரச அறவித்தல் ஊடாக நிறுத்தப்பட்டது.
வண. அட்லியின் சிபாரிசினால் வண. ஜோன் கென்ஸ்மான் (முருகேசர்)அமெரிக்க ஆலய சபையின் கோட்டையில் உள்ள குருமடத்தில் கற்க அனுமதிக்கப்பட்டார்.
1832- முட்டுவாலில் உள்ள முத்துக்குளித்தல் நிலையம் 3887-5-3 £ பவுண்ஸ் பணமீட்டியது.
ஆகஸ்ட் 06- இலங்கை சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
செப் 08- கொழும்பில் முதலாவது கிரிக்கெற் கிளப் உருவாகியது.
செப் 28- பலாத்காரமாக வேலை செய்வித்தல் அரச கட்டளையின் கீழ் தடை செய்யப்பட்டது.
டிசம்பர் 01- திரு கென்றி மார்டின் வட்டுக்கோட்டை குருமனையில் ஆசிரியராக பணிக்கமர்த்தப்பட்டார்.
1833- இலங்கை ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.
ஜனவரி 07- சேர் ஆர். டபிள்யு கோர்டன் இடமிருந்து ஓர் கையெழுத்து பதிலை திரு கென்றி மார்ட்டின் பெற்றுக்கொண்டார்.
ஏப்ரல் 07- அரிப்பு ல் உள்ள முத்துகுளித்தல் நிலையம் 25043-10- பவுண்ஸ் பணமீட்டியது.
ஏப்ரல் 30- கைக்கடிகாரம் திருத்தல் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒக்டோபர் 01- பேர்சிவல் அக்லான்ட டைக் அரச அதிபராகவும் சுங்கவரி கலக்டராகவும் வடமாகாண வரிஅறவிட்டாளராகவும்,நியமிக்கப்படார்.
இவரின் நிர்வாகம், மாகாண நிர்வாகங்களில் மிகவும் சிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
40 ஆண்டுகள் திறம்பட செயற்பட்டதால் “வடக்கின் ராசா” என்ற சிறப்பை இவர் பெற்றுக்கொண்டார்.
1833- பொது மராமத்து வேலைகள் இலாகா யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்க சபையை சேர்ந்த டாக்டர் நாதன் வோட் என்பவர் அமெரிக்காவிலிருந்து வந்து மட்டக்களப்பு குருமனையில் இணைந்து கொண்டார்.
மேல் சட்ட சபை உருவாக்கப்பட்டது.
அமெரிக்கன் சபை மீதிருந்த தடைகள் அகற்றப்பட்டன அமெரிக்கன் சபையை சேர்ந்த திருமதி எக்காட்டினால் பண்டத்தரிப்பில் ஓர் பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது மழலைகள் பாடசாலையாகும்.
1834 மே 19 பாடசாலை கமிசன் நிறுவப்பட்டது.
மே 22 -சட்ட சபையின் முதல் கூட்டம் கொழும்பில் நடந்தேறியது.
சமய நிர்வாக நோக்கங்களுக்காக இலங்கை கத்தோலிக்க திருச்சபை கொச்சினிலிருந்த நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி நிர்வாகமாகியது. வண. பிரான்சிஸ் சேவியர் சுவாமியார் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1834- நல்லூரிலிருந்த அச்சுக்கூடம் அமெரிக்க சபைக்கு கையளிக்கப்பட்டு பின் மானிப்பாய்க்கு கொண்டு செல்லப்பட்டது.
அமெரிக்க மிசனால் மதசார்பற்ற சபை உருவாக்கப்பட்டது.
கென்றி றிச்சாட் கொய்சிங்டன் யாழ்ப்பாணம் வந்து அமெரிக்க சபையுடன் இனைந்து கொண்டார்.
1834-வண.பீற்றர் பேர்சிவலினால் யாழ் மத்திய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இவர் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் வெஸ்லியன் மிசனின் பொது அத்தியட்சகராகவும், நிதிச் செயலாளராகவும் இருந்தார்.ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனியாக தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டன.யாழ்ப்பாண மாணவர்களுக்கு மட்டுமல்ல இலங்கை பூராகவும் இருந்த அனைவருக்கும் அது பொதுவாக இருந்தது. திரு பேர்சிவலிற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் இரண்டு பெண்கள் ஆங்கில பாடசாலை, ஆறு ஆண்கள் தழிழ் பாடசாலை,இரண்டு பெண்கள் தழிழ் பாடசாலைகள் நடாத்தப்பட்டன. முழுநேரப்படிப்புடன்,விடுதி வசதியும் வழங்கப்பட்டது. வரலாறு,கணிதம்,அளவீடு,இயற்கையியல்,விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அதேகாலத்தில் புத்தூர்,கட்டைவேலி,பருத்திதுறை ஆகிய இடங்களிளும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பேர்சிவாலை தொடர்ந்து,வணக்கத்துக்குரிய ஜில்லிங்ஸ்,வில்லியம்,ரொபின்சன்,பார்பர்,தல்பொட்,மிட்சல்,கொர்ன்பி,ரொட்ஸ்,ஆகியோர் இப்பாடசாலைகளை நிர்வகித்தனர்.
1834- யாழ்ப்பாணத்தில் திருவாளர்கள் ஜி.கொலற் ,ஜி.கொச்,ஒலிகசேகரம் பிள்ளை ஆசைப்பிள்ளை ஆகியோர் வழக்கறிஞர்களாக தமது தொழிலை ஆரம்பித்தனர்.
1835- வரணி,சாவகச்சேரி ஆகிய இடங்களில் அமெரிக்க மிசன் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையின் முதலாவது கத்தோலிக்க குரு முதல்வர் வண. பிரான்சிஸ் சேவியர் மரணமானார்.
யூலை 18- பிரித்தானிய,அயர்லாந்து அரச சபைக்கு கென்றி மாட்டினால் அனுப்பட்ட இரண்டு பூகோள கோளங்கள் கிடைக்கப்பெற்றன.
1835- திருவாளர்கள் சி.ஸ்பெல்வின்ட், ஏ.டிஸ்ட் ஜென்ஸ்,பி.இ.ரூஸ் சென்ட் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்களாக தொழிலை ஆரம்பித்தனர்.
1836- பெப் 06- இலங்கை சுயகட்டுப்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1836- வண. பிதா வின்சன் டி றொசாறியோ ்அப்போஸ்தலிக்க திருச்சபையின் குருமுதல்வராக “தமாசென்னின் ஆயர்”என்னும் பட்டத்துடன் வண. பிரான்சிஸ் சேவியர் இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
புவர் போதகர் வட்டுக் கோட்டை குருமனையை விட்டு விலகி மதுரைக்கு சென்றார்.
வடக்கின் பிரபல்லியமான “பூதன்குளி” பாலம் கட்டுதல் ஆரம்பிக்கப்பட்டது. ஏற்றுமதி,இறக்குமதி வரி இலங்கையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.