Breaking News
கையாலாகாத்தனமும் குற்றவுணர்வும்.
.

கையாலாகாத்தனமும் குற்றவுணர்வும்.
இந்த கடும் வெயிலும் வெப்பமும் எங்களை பாதிக்கிறதை விட போரின் பரிசாக உடலிலும் தலையிலும் உலோகச் சிதறல்களை (shrapnels) சுமந்து திரிகின்றவர்கள் படும்பாடு சொல்லொணாதது.வெயில் ஏற ஏற உடலுக்குள் இருக்கும் உலோகம் சூடாகி அவர்களுக்கு மரணவலியை தருகின்றது என்கிறார்கள்.
மனித உடலுக்குள் புதைந்திருக்கின்ற உலோகம் புற வெப்பநிலைக்கு ஏற்ப வெப்பமாகுமா என்றெல்லாம் எனக்கு ஆராய்ந்து அறியமுடியவில்லை. ஆனால் இன்று, தங்கை ஒருத்தி தலைக்குள் கொதிக்கும் உலோகத்தோடு வெயிலில் பட்ட பாட்டை அருகில் இருந்து பார்த்த போது மீண்டும் மீண்டும் கையாலாகாத்தனமும் குற்றவுணர்வும்.