Breaking News
யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-06.
யாழ் மத்திய கல்லூரி

யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-06.
1814 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (jcc) நிறுவனர் வணக்கத்திற்குரிய ஜேம்ஸ் லிஞ்ச் அவர்களின் 240 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் குறிக்கும் ஆண்டில் இந்த கட்டுரையை எழுதுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மூத்த அறிஞர் யாழ்ப்பாணத்திற்கான முதல் வெஸ்லியன் மிஷனை வழிநடத்தினார். தாமஸ் ஸ்குவான்ஸ் அவர்கள் 1814 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் காலடி எடுத்து வைத்தார். அதே ஆண்டில்இ இந்த மாபெரும் தலைவர் நமது அல்மா மேட்டரை நிறுவினார். ஜேசிசிக்கு ரெவ். லிஞ்ச் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்இ அல்மா மேட்டரை நிறுவுவதற்காக அவர் வாங்கிய சொத்தில் அவரது சிலை 2013 இல் திறக்கப்பட்டது. யாழ் மத்திய கல்லூரியின் ஆரம்ப கட்டங்களை விவரிக்கும் பல கட்டுரைகளை மையங்கள் கண்டுள்ளன, ஆனால் அதன் ஸ்தாபகரைப் பற்றி வரையறுக்கப்பட்ட விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுரையில், ஆசிரியர் எங்கள் அன்பான நிறுவனர்-முதல்வரின் வாழ்க்கை வரலாற்றையும் 1814 முதல் ஜேசிசி இன் வளர்ச்சியையும் சுருக்கமாகக் கூறுகிறார். 1847 ஏப்ரல் 19 ஜேனல் சேர் .ஜே. ஆர் ரெனன்ற் லெப்ரினன்ற் கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார் மே 29 ரொறிங்டன் பிரிவு காலியிலிருந்து வந்து இலங்கை கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார் செப் 17 பெற்றகினி ஆயர் யாழ்ப்பாண குரு முதல்வராக நியமிக்கப்பட்டார்திருமணப்பதிவுச் சட்டம் அமுலாக்கப்பட்டது.
நவம்பர் 28 அமலோற்ப தியாகிகள் சபையை சேர்ந்த குருவானவர் வண செமேரியா யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமல உற்பவ தியாகிகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையானது அதி வண டாக்டர் மசனோற் மார்செய்ஸ் ஆயர் அவர்களால் 1815ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. வண பிதா செமேரியா, வண பிதா கிற்றிங், சங்கைக்குரிய சகோதரர் ஸ்ரிபன் கஸ்பாக் ஆயோர் அதன் முதல் உறுப்பினர்கள் ஆவர்.
டிசம்பர் 31 இந்து சமயத்தை பாதுகாப்பதற்காக கல்விமானும் சைவ மறுமலர்ச்சியாளனுமாகிய ஆறுமுக நாவலர், வண்ணார்பண்ணை சிவன்கோவிலில் தொடச்சியான தனது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
அமெரிக்க மிசனைச் சேர்ந்த டாக்டர் வார்ட் அமெரிக்கா திரும்பினார். அமெரிக்க மிசனைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் பிலக் கிரீன் என்பவர் அதன் வைத்திய ஸ்தாபனத்தை பொறுப்பேற்பதற்காக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
1848 மார்ச் சிலுவை அடியில் இருக்கும் தேவமாதாவின் ஒப்பாரி பாடல் கென்றி மார்டினால் இயற்றப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 11 முதன்முதலாக இலங்கையில் ஐஸ்கட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் கத்தோலிக்க குருமடம் எனப்படும் முதலாவது கத்தோலிக்க ஆண்கள் ஆங்கிலப்பாடசாலை வண ஆயர் பெட்டக்கினியால்
ஆரம்பிக்கப்பட்டது.
ஒக்ரோபர் 1 சேர் வில்லியம் ரூவைனன் யாழ்ப்பாண உதவி அரச அதிபராக நியமிக்கப்பட்டார்.
வீதிப் போக்குவரத்துச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. யாழ்ப்பாண பேராலயம் குறித்த குழப்பம் அடைக்கலமாதா கோவிலின் ஆயர் பெற்றாக்கினிக்கு எதிராக இடம் பெற்றது. இக்கலம்பகத்தின் போது திரு றொபேட் வில்லியம் லாங்ஸ்யோ கடுமையாக காயமுற்றார்.
1849 சனவரி 6 மட்டக்களப்பு குருமடத்தைச் சேர்ந்த சண்முக சட்டம்பியார் 55 வயதில் மரணமடைந்தார். இவர் சிறந்த கல்விமானும் தமிழ் ஆசிரியருமாவார்.
1849 சைவ சித்தாந்த தத்துவத்தின் மூன்று கோவைகள் டாக்டர் கொய்சிங்ரனால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.
யூலை 15 றொபேட் வில்லியம் லாங்ஸ்போ மரணமானார்.
மாந்தோட்டத்தில் கோவாவைச் சேர்ந்த குருவானவர் மிக்காயேல் பிலிப் மாஸ்காறோனஸ், ஆயர் பெற்றாக்கினிக்கெதிராக கிளம்பி எழுந்தார். மன்னார் மாதோட்ட கிளைகள் இரண்டாக பிரிந்தன.
செப்டம்பர் யாழ்ப்பாண பிரதான தெருவில் ஸ்ருவாட்ஸ் தோட்டம் ஆயர் பெற்றாக்கினிக்கென ஓர் வாசல்தலம் அமைக்க வாங்கப்பட்டது.
1850 யாழ்ப்பாணம் ஆண்கள் குருமடம் ஐரிஷ்காரனான பற்றிக் போய் என்பவரிடம்; பொறுப்பளிக்கப்பட்டது.
ஐரிஷ்காரரின் விதவையும் வணபிதா பிளானகனின் தாயுமான திருமதி பிளானகனன் யாழ்ப்பாண கத்தோலிக்க பெண்கள் ஆங்கில பாடசாலைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் குருமார்கள் மோறுவா விவியே ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்கள்.
யாழ் கழஞ்சியத்தின் களஞ்சிய அதிகாரியாக திரு நிக்கோலஸ் புதிதாக நியமிக்கப்பட்டார். 1866ம் ஆண்டுவரை அவர் அதே பதவியில் இருந்தார்.
நவம்பர் 27 சேர் Nஐhர்ஐ; அண்டர்சன் கவர்னராக இலங்கை வந்தடைந்தார்.
1856 யாழ்ப்பாண கத்தோலிக்க சேமக்காலைக்கென ஓர் நிலம் வாங்கப்பட்டது. ஆரம்பத்தில் உதவும் நண்பர் அமைப்பின் வைத்திய சாலைக்கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் முதலாவது மேல்மாடிக்கட்டிடம் கட்டப்பட்டது.
1851 யூன் 4 யாழ்ப்பாணத்தில் குருமுதல்வராக வண பிதா செமேரியா நியமிக்கப்பட்டார்கோப்பாயில் ஆலய சபை கோவில் தனது சேவையை ஆரம்பித்தது.
1852 சனவரி வெஸ்லியன் மிசனைச் சேர்ந்த வண திரு பேரசிவல் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க தொடங்கினார்.
மே 8 வண கிறிஸ்ரியன் டேவிட் தனது 81வது வயதில் மரணமானார். லிங்கம் மேலாயர் டாக்டர் வோட்ஸ்வூத் அவரை இலங்கை ஆலயசபையின் பிதாமகன் என மகுடம் சூட்டினார்.
யாழ்ப்பாணக்கோட்டை இராணுவத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரிற்கு அவரின் நீண்ட சேவையையும், ஒழுக்கத்தையும் பாராட்டி வெள்ளிப்பதக்கம் அளித்து கௌரவிக்கப்பட்டார்
டிசம்பர் பருத்தித்துறையில் கொலரா நோய் தொற்ற தொடங்கியது
யாழ்ப்பாண அமெரிக்க மிசன் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது யாழ்ப்பாண ஆசனக் கோவிலான புனித மரியாள் ஆலயம், திருப்பணி சங்கத்தின் நிர்வாகத்திற்கு கீழ் வந்தது
1853 சனவரி யாழ் மத்திய கல்லூரியின் ஒரு பகுதியான வண்ணார்பண்ணை செட்டி தெருவில் சென் பீட்டர்ஸ் பாடசாலை
ஆரம்பிக்கப்பட்டது இதுவே பின்னர் கில்னர் கல்லூரியாக மாற்றப்பட்டது
மே 16 கதிரவேலுப்பிள்ளையினால் இலக்கிய கண்ணாடி என்னும் ஆங்கில மாத சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது கோப்பாயில் ஆலய சபையினால் ஓர் உயர்தர தமிழ் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது
யூன் புகைப்படக்கலை அமெரிக்க மிசனரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது
நவம்பர் கொலரா யாழ்ப்பாணத்திலும் தொற்ற ஆரம்பித்தது
ஒரு ஐரோப்பியனின் அப்போதைய மாதாந்த செலவு யாழ்ப்பாணத்தில் 4 பவுண்டுகளாகும்.
1854 மார்ச் 13 முதலாவது தமிழ் வெஸ்லியன் மிசன் போதகராக வண றிச்சாட் லொட்சன் வைரமுத்து திருநிலைப்படுத்தப்பட்டார்
மார்ச் 21 சாவகச்சேரியில் கத்தோலிக்க மிசனின் தேவைக்கென, ஐரோப்பிய பெரும்தோட்ட முதலாளியான கார்டி என்பவர் ஒரு காணியை அன்பளிப்பு செய்தார்
1854 மே 1 யாழ்ப்பாணம், கொழும்பு ஆகியவற்றின் கத்தோலிக்க ஆதினங்களிக்கிடையேயுள்ள விடயங்களை தீர்த்துக்கொள்
வதற்ளாக வண பொணான்ட் ஆயர் காங்கேசன்துறைக்கு விஐயம் செய்தார்
டிசம்பர் தலபுராணத்தை இயற்றிய, கவிஞரும் சாஸ்திரியுமான அச்சுவேலியைச் சேர்ந்த காசிநாதப்புலவர் காலமானார்.
ஊர்காவற்துறை சேமக்காலை பற்றி வண பிதா லோறியென்ற் இனால் தொடரப்பட்ட வழக்கு முடிவிற்கு கொண்டு வரப்பட்டது சேமக்காலை
அனைவருக்கும் பொதுவானது என தீர்ப்பளிக்கப்பட்டது ஆறுமுகநாவலரால் இயற்றப்பட்ட சிவ நூசன பரிகாரம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது இது மக்கள் மத்தியில் பெரும் உணர்வலைகளை தோற்றுவித்தது
1855 பெப் 3 வண டானியல் புவர் மானிப்பாயில் காலமானார்
பெப் 7 குடாநாடு முழுவதும் பரவிய கொலரா தணிந்தது இதற்று நன்றி நவில ஓர் திருப்பலி யாழ்ப்பாண ஆசன கோவிலில் நிறை
வேற்றப்பட்டது.
மே 11 சேர் கென்றி வோர்ட் அரச ஆட்சி அலுவல்களை பொறுப்பேற்க வந்தார்
மே 22 யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்க மிசனின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக அமெரிக்க ஆலய சபையினால் நியமிக்கப்பட்ட ஆணையாளர்களான வணக்கத்திற்குரிய தொம்ப்சன் டாக்டர் றுபுஸ் அண்டர்சன் ஆகிய இருவரும் தமது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தனர்
நவம்பர் 15 யாழ்ப்பாண கச்சேரியை சேர்ந்த ஆசீர்வாத முதலியார் மரணமடைந்தார்
1856 யூன் 24 கொலரா யாழ்ப்பாணத்தில் மீண்டும் தொற்ற தொடங்கியது புகைப்படக்கலை திரு.பார்டிங்கினால் காட்சிப்படுத்தப்பட்டது
ஆகஸ்ட் 21 ஆயர் பெட்டக்கினிக்கு உதவி ஆயராகவும் ஒலிம்பியாவிற்று ஆயராகவும் வண பிதா செமேரியா நியமிக்கப்பட்டார்
செப்டம்பர் மன்னாரிலிருந்து கண்டிக்கும் கண்டியிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து காலிக்கும் மொத்தம் 300 மைல் தூரத்திற்கு தொலைத்தொடர்பு வநசதி ஏற்படுத்தவென 15000 பவுண்ஸ்கள் பணம் ஒதுக்கப்பட்டது யாழ்ப்பாண அப்போஸ்தலிக்க திருச்சபையின் குருமுதல்வராக அமல உற்பவ தியாகிகள் சபையை சேர்ந்த வண பிதா பொஞ்சின், கோயம்புத்தூர் சபையை சேர்ந்தவர். மார்செய்ல், ஆயர் பொனன்ற் அவர்களால் கோயம்புத்தூரிலிருந்து அனுப்பப்பட்டு; ஊர்காவற்துறையை வந்தடைந்தார்.
1857 ஏப் 22 ஓர் முத்துக்குளித்தல் நிலையம் 20000 பவுண்ஸ் பணமீட்டியது
மே 1 கொழும்பு புறக்கோட்டையிலும் யாழ்ப்பாணத்திலும் ஓர் தமிழ் தனியார் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது
1857 யூன் மோர்னிங் ஸ்ரார் பத்திரிக்ககையின் தமிழ் ஆசிரியராக கரோல் வி;ஸ்வநாதபிள்ளை அவர்களை தொடர்ந்து கே.ஆர். ஆர்னோல்ட் நியமனம் பெற்றார்
யாழ் ஆயர் பெற்றாக்கினி பொல்லவத்தவில் மரணமடைந்ததை தொடர்ந்து செமேரியா யாழ் ஆயராகநியமிக்கப்பட்டார்கென்றிமாட்டி எஸ்தர் வியாசம் என்னும் கவிதை தொகுதியை ஆரம்பித்தார்.
1858 சனவரி 1 கொழும்புக்கும் காலிக்குமான முதல் தொலைத்தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
ஏப்ரல் அரிப்புவில் உள்ள முத்துக்குளித்தல் நிலையம் 24.129 பவுண்ஸ் பணமீட்டியது.
மே 5 குமாரசாமி முதலியார் சைமன் கதிரவேல்பிள்ளை யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராக தன் தொழிலை ஆரம்பித்தார்.
யூலை 22 'பேர்ன்' நீராவிக்கப்பல் சேவையை ஆரம்பித்தது.
ஆகஸ்ட் 3 சேர் கென்றி யட்வேட் இலங்கை புகையிரத சேவையை ஆரம்பித்துவைத்தார்.
செப் 17 இலங்கைக்கும் இந்தியாவிற்குமான நீருக்கடியிலான தந்திக்கம்பிதனகைமுனைக்கும்தலைமன்னாருக்கும் இடையில் நிறுவப்பட்டது.
ஒக்டோபர் மிகுந்தலை ஊடாக கண்டிக்கும் மன்னாருக்குமான தந்திசேவை ஆரம்பமானது.
மதுசார வரியாக 75000 பவுண்ஸ் பெறப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமான தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1859 பெப் முதன் முறையாக கத்தோலிக்க வாசிகசாலை யாழ்ப்பாணத்தில் ஆயர் செமேரியாவால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஏப்ரல் அரிப்புவில் உள்ள முத்துக்குளித்தல் நிலையம் 48215 பவுண்ட் பணமீட்டியது.
யாழ்ப்பாண நகரத்தின் சனத்தொகை 28,500 என கணக்கிடப்பட்டது.
நவம்பர் சிறுவர்களுக்கான ' பள்ளியர் னேசன்' எனப்படும் பத்திரிகை அமெரிக்க மிசனைச் சேர்ந்த திருவாளர்கள் சாண்டர்ஸ் கிக்கொக் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
சென் ஜோன்ஸ் தேவாலய தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. நிக்கோலாஸ் திசவீரசிங்கி முதலியார் மரணமடைந்தார்.
மார்ச் ஒரு முத்துக்குளித்தல் நிலையம் 36681 பவுண்ட்ஸ் பணமீட்டியது.
1860 மே பொதுமுகாமைத்துவ இலாகாவின் தலைமை அதிகாரியாக பிரான்சிஸ் முத்தையா ஆம்ஸ்ரோங் நியமிக்கப்பட்டார்.
யூன் 30 சேர் கென்றி லார்ட் மட்ராஸ் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
ஜெனல் லொக்கயர் இலங்கையின் லெப்டினன்ட் கவர்னர் ஆகநியமிக்கப்பட்டார்.
யூலை 15 இலங்கை பிரதமநீதியரசராக சேர் ஈ எஸ் கிறிசி நியமிக்கப்பட்டார். இவர் சிறந்த வரலாற்ராசிரியராகும்.
ஆக 2 மட்ராஸ் கவர்னர் சேர் கென்றி லார்ட் எதிர்பாராமல் காலரா நோய்க்கு பலியானார்.
சாவகச்சேரியில் புனித அப்போஸ்தல லிகோரி சிற்றரலயம் ஸ்தாபிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 4 சேர் சார்ள்ஸ் மக்கார்த்தா இலங்கை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
செப் கென்றி மாட்டினால் யாழ்ப்பாண பேராலயத்தில் சர்ச்சைக்குரிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது.
ஒக்டோபர் பிரசித்தி பெற்ற படைப்புக்கள் எழுதிய திரு காசி செட்டி சிலாபத்தில் மரணமானார்.;
டிசம்பர் 21 பருத்தித்துறையில் சென் தோமஸ் கோவிலுக்குரிய கட்டிட வேலைகள் வணபிதா பெல்சியரால் ஆரம்பிக்கப்பட்டது.
டிசம்பர் இந்திய பல்கலைக்கழக சோதனைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தன.
1861 மார்ச் காலனிகளின் கணக்கு பரிசோதகர் நாயகமாக திரு பென்பாதார் நியமிக்கப்பட்டார்.
மார்ச் 31 அரச களஞ்சிய காப்பாளர் கென்றி மாட்டின் மரணமானார். ஆசிரியர், பிரசங்கியார், பத்திரிகை ஆசிரியர், கவிஞர், ஓவியர் என பன்முக ஆளுமை கொண்ட மனிதராகவிருந்தார்.
மே 21 அமலோற்பவ மாதா சபை நிறுவினர் வண ஆயர் மசனோ காலமானார்.பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கென சென் ஜோசப் அனாதை இல்லம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
யூலை இலங்கை சட்ட சபைக்கு முத்து குமாரசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யூலை 25 கரையூர் சென் ஜேம்ஸ் தேவாலயத்திற்கு அஸ்திவாரம் வண பிதா மோரியோவினால் இடப்பட்டது.
1861 மார்ச் 14 ராணியின் கணவர் மரணமடைந்தார்.
டிசம்பர் 16 பரப்பாங்கணிடல் கோவில் மேல் நீதிமன்ற உத்தரவின்படி கோவா பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
1862 மார்ச் 19 யாழ்ப்பாண பேராலயத்தில் புனிதப்பொருள் திருடப்பட்டது.
ஏப்ரல் கொலா நோய் மீண்டும் ஆரம்பிக்ப்பட்டது.
யூன் 15 கவர்ணர் மக்கார்த்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.
யாழ்ப்பாண கத்தோலிக்க மக்கள் சார்பில் வழக்கறிஞர் பஸ்ரியாம்பிள்ளை கவர்னர் முன் ஓர் உரை நிகழ்த்தினார்.
பாசையூரில் கொலரா தொற்று ஏற்பட்டது.
அகஸ்ட் 15 பருத்தித்துறையில் சென் தோமஸ் தேவாலயம் வழிபாட்டிற்காக திறந்து விடப்பட்டது.
செப்டம்பர் வெண்கல காசு பழக்கத்திற்கு வந்தது.
என்.ஜி.கூல்ட் என்பவரால் ' யாழ்ப்பாண பிறிமான்' விருது ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 29 வெஸ்லியன் மிசனைமாரில் மிகவும் இளையவரான வண றிச்சாட் வட்சன் வயிரமுத்து 39வது வயதில் காலமானார்.
1861 ஒக்டோபர் வழக்கறிஞர் பஸ்தியாம்பிள்ளை யாழ்ப்பாண மாநகர அங்கத்தவராக பதவி நியமனம் பெற்றபின் மரணமானார்.
நவம்பர் 2 போர்தோவில் இருந்து திருக்குடும்ப கன்னியர் மடத்தை சேர்ந்:த கன்னியாஸ்திரிகள் யாழ்ப்பாணம் வந்தனர்.
டிசம்பர் திரு கென்றி மார்டின் நினைவாக மாட்டின் வீத யாழ்ப்பாணத்தில் திரு டைக்கினால்; திறந்து வைக்கப்பட்டது.
1863 சனவரி யாழ் திருக்குடும்ப கன்னியர்மடம் கன்னியாஸ்திரிகளிடம் திருமதி பிளாகனால் பொறுப்பளிக்கப்பட்டது.
பெப்ரவரி 6 இலங்கை தேகபக்தன் என்னும்பத்திரிகை சி. கதிரவேலுப்பிள்ளையால் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவது தமிழ் பாரிஸ்டர் குமாரசாமி லிங்கன்ஸ் இன் எனப்படும் சட்ட கல்லூரியின் சட்ட நிபுணர் கழக அங்கத்தவராக ஏற்றுக்
கொள்ளப்பட்டார்.
ஏப்ரல் 14 அடைக்கல மாதா கோவிலில் குருமாருக்கான சிற்றாலயம் புனிதப்படுத்தப்படுத்தப்பட்டது.
யூன் 27 கொழும்புத்துறை அனாதை ஆச்சிரமத்திற்கென திரு ஜோசப் பிறைஸ் அவர்களின் நிலம் வாங்கப்பட்டது.
டிசம்பர் 20 புதியதிருமண சட்டத்திற்கெதிரான கத்தோலிக்கர்களின் கூட்டங்களும் ஆராதனைகளும் நடாத்தப்பட்டது. இருப்பினும் புதிய திருமண சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
திரு.குமாரசாமியின் வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்து சட்ட சபையில் தமிழரின் இருக்கை காலியாக இருந்தது பின்னர் ஜே.எச் . ஈற்றன் அல் இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
1863 டிசம்பர் சார்ள்ஸ் மக்கார்த்தி சுகயீனம் காரணமாக ஐரோப்பாவிற்கு திரும்பினார். அவருடைய இடத்தை மேஜர் ஜெனரல்
பிரைய்ன் பொறுப்பேற்ரார்.
1864 சனவரி முதலாவது றயில் இஞ்சின் இலங்கை வந்தடைமந்தது.
மார்ச் 2 முதலாவது தொலைத்தந்தி செய்தி ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்தது. நீராவியில் இயங்கும் முதலாவது நீராவிக்கப்பல் கொளமற் யாழ்ப்பாணத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதுவே இலங்கையில்
செய்யப்பட்ட நீராவிக்கப்பல் ஆகும்.
ஏப்ரல் 17 புனித ச10சையப்பர்; சகோதரர்கள் சபை கொழும்புத்துறையில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் பாசையில் கற்பிற்கும் ஆசிரியர்களை மாணவர்களுக்கு வேதம் போதிப்பதற்கென உருவாக்குவதே இவர்களின் வேலை ஆகும்.
ஏப்ரல் 22, வெஸ்லியன் மிசனைச் சேர்ந்த வண ஜோன்பிலிப் சண்முகம் Nபுhதகர் மரணமடைந்தார். வெஸ்ன்யன் மிசனில் முதல் உருவாக்கப்பட்ட போதகர்களில் இவரே மூத்தவராகும்.
மே 24 திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலைக்கட்டிடங்களுக்கான அஸ்திவாரத்திற்கான பூசையை ஆயர் சேமேரியா இன்று நிறைவேற்றினார்.
வண்டிச் சூசைப்பிள்ளையர் எனப்படும் யோசப் இன்று மரணமானார். கச்சேரியில் தோம்புகளை இவரே பராமரித்து வந்தார்.
செப்டம்பர், அடைக்கலமாதா கோவிலில் அருகே வெள்ளையடிப்பவர்களிடையே கொலரா நோய் தொற்றியது.
ஒரியன்ரல் வங்கி கிளை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஒக்டோபர் சனிக்கிழமைகளில் மத்தியானம் 2 மணியுடன் அரச காரியாலயங்களை பூட்டப்பட்டன.
டிசம்பர் 27 முதலாவது விசேட ரயில் இன்றிலிருந்து ஓட ஆரம்பித்தது.