Breaking News
யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-06. ஏப்ரல் 11 முதன்முதலாக இலங்கையில் ஐஸ்கட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
.

1847 ஏப்ரல் 19 ஜேனல் சேர் ஜேஆர் ரெனன்ற் லெப்ரினன்ற் கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
மே 29 ரொறிங்டன் பிரிவு காலியிலிருந்து வந்து இலங்கை கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்
செப் 17 பெற்றகினி ஆயர் யாழ்ப்பாண குரு முதல்வராக நியமிக்கப்பட்டார். திருமணப்பதிவுச் சட்டம் அமுலாக்கப்பட்டது
நவம்பர் 28 அமலோற்ப தியாகிகள் சபையை சேர்ந்த குருவானவர் வண செமேரியா யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமல உற்பவ தியாகிகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையானது அதி வண டாக்டர் மசனோற் மார்செய்ஸ் ஆயர் அவர்களால் 1815ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. வண பிதா செமேரியா, வண பிதா கிற்றிங், சங்கைக்குரிய சகோதரர் ஸ்ரிபன் கஸ்பாக் ஆயோர் அதன் முதல் உறுப்பினர்கள் ஆவர்.