Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

“மனித உடலில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்”,

.

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.

* ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

* மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.

* பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.

* அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.

* ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.

* இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.

* மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.

* உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

* மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.

* உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

* ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.

* ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்ககளை சிமிட்டுவார்கள்.

* பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

* கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.

* குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.

* குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.

* சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்.”,