பிரான்ஸில் அரசியல் நெருக்கடி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் பதவி பறிப்பு
.

பிரான்சில் எதிர்க்கட்சியினர் இன்று ஆளும் அரசாங்கத்தை வீழ்த்தி, ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியை ஒரு அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.தீவிர வலதுசாரி மற்றும் இடதுசாரி சட்டமியற்றுபவர்கள் பிரதம மந்திரி மைக்கேல் பார்னியர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஒன்றிணைந்தனர்.நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை 331 வாக்குகள் கிடைத்தன.இதன் தொடர்ச்சியாக பிரதமர் பார்னியர் தனது ராஜினாமா மற்றும் அவரது அரசாங்கத்தின் ராஜினாமாவை விரைவில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமருடன், ஜனாதிபதி மக்ரோனும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், அரசியல் நெருக்கடியில் இருந்து எளிதாக வெளியேற முடியாது
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.பிரான்ஸ் இப்போது ஆழ்ந்த அரசியல் நிச்சயமற்ற காலகட்டத்தை எதிர்கொள்கிறது, இது ஏற்கனவே பிரெஞ்சு இறையாண்மை பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீட்டாளர்களை பயமுறுத்துகிறது.மக்ரோன் இப்போது வேறொரு பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.சனிக்கிழமையன்று நோட்ரே-டேம் கதீட்ரலை மீண்டும் திறக்கும் விழாவிற்கு முன் ஒரு பிரதமரை பெயரிட வேண்டும் மக்ரோன்.எந்தவொரு புதிய பிரதமரும் 2025 வரவுசெலவுத் திட்டம் உட்பட, பிளவுபட்ட பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதாக்களை பெறுவதில் பார்னியர் எதிர்கொண்ட அதே சவால்களை எதிர்கொள்வார்.அதே நேரத்தில் ஜூலைக்கு முன் புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடத்த முடியாது.