கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 20 வயதான இந்திய மாணவன்!
.

கனேடிய நகரான எட்மண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் வேறு எவருக்கும் தொடர்பு இருப்பதாக தாம் நம்பவில்லை என விசாரணை அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.சந்தேக நபர்களை கைதுசெய்த போது, அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், காவலாளியாகப் பணிபுரிந்த ஹர்ஷந்தீப் சிங் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார்.கொலைக்கான காரணத்தை பொலிஸார் இன்னும் கண்டறியவில்லை, மேலும் உயிரிழந்த மாணவரின் பிரேத பரிசோதனைகளை திங்கட்கிழமை (09) மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.