இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்
.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை யேமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் வான்வழி குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.எனினும் இந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் இறந்ததாக கூறப்படுகிறது.டாக்டர் டெட்ரோஸ், தனது ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் WHO சகாக்களுடன் சேர்ந்து, விமானத்தில் ஏறவிருந்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் விமானத்தின் பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த அன்டோனியோ
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதலை கண்டித்து சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் ஒருபோதும் குறிவைக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.X இல் ஒரு இடுகையில், யேமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமீபத்திய தாக்குதல் அதிகரிப்புக்கு குட்டெரெஸ் வருந்தினார்.மேலும் சனா சர்வதேச விமான நிலையம், செங்கடல் துறைமுகங்கள் மற்றும் யேமனில் உள்ள மின் நிலையங்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் "ஆபத்தானது" என்று கூறினார்.ஐநா தலைவரின் கூற்றுப்படி, வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர், இன்னும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.