Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம்

.

தமிழகத்தின் சுற்றுலாத்துறை சார்பில், சர்வதேச பலூன் திருவிழா வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் தொடங்குகிறது.

இந்த திருவிழாவில் உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தரும் ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன.

தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டமைப்பில் ஆண்டுதோறும் இந்த திருவிழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

இதில், வெளிநாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றில் பயணிக்கவும், அவற்றை காணவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டு, கூடுவது வழக்கம். அந்த வகையில் இது பத்தாவது ஆண்டாகும்.

இந்த ஆண்டில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா, தமிழக அரசின் சுற்றுலா துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.

சர்வதேச பலூன் திருவிழா மூன்று மாவட்டங்களில் ஏற்பாடு

பொதுவாக பொள்ளாச்சியில் மட்டும் நடைபெறும் இந்த விழா, இந்த ஆண்டு முதல் முறையாக சென்னை மற்றும் மதுரையிலும் நடைபெற உள்ளது.

இங்கிலாந்துபிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெப்ப காற்று பலூன்கள் மற்றும் சிறுத்தை, ஓநாய், யானை உருவப் பலூன்களும் பறக்கவிடப்படுகின்றன.

இந்த விழா ஜனவரி 10 முதல் 12 வரை சென்னை கிழக்கு கடற்கரைச்சாலை கோவளத்தில், ஜனவரி 14 முதல் 16 வரை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ரைட் கொங்கு சிட்டியில், மற்றும் ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.