Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது

.

97 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

66 வயதான பொஸ்னியா பிரஜை ஒருவர் இன்று (08) காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது பயணப் பெட்டிக்குள் கால்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 114 பிரஷ்களுக்குள் 2 கிலோ 759 கிராம் கொக்கெய்னை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்தார்.

அவர் கொலம்பியாவிலிருந்து குறித்த போதைப்பொருளுடன் பயணிக்கத் தொடங்கி கட்டாரின் டோஹாவுக்கு வருகைதந்துள்ளார்.

அங்கிருந்து இன்று அதிகாலை 02.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கைது செய்யப்பட்ட பொஸ்னிய பிரஜை மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.