Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், 2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி அரகலய போராட்டக் காலத்தில் அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து நட்டஈடு கிடைக்கவில்லை.

இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன.

‘அரகலய’ போராட்டத்துக்கு இரண்டு வருடங்கள்: எரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை.

இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், 2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி அரகலய போராட்டக் காலத்தில் அழிக்கப்பட்ட பேருந்துகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து நட்டஈடு கிடைக்கவில்லை என இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரகலய போராட்டத்தின் போது 50 பேருந்துகள் முழுமையாகவும், 50 பேருந்துகள் பகுதியளவிலும் சேதமாக்கப்பட்டது.

பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்ற ரீதியில் அரசாங்கத்திடம் பல தடவைகள் இதற்கான நட்டஈட்டை வழங்குமாறு கோரியுள்ளோம்.

பல பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை காப்புறுதி நிறுவனங்களின் உதவியுடன் பழுது பார்த்தனர். ஆனால் 30 இற்கும் அதிகமான பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை பழுதுபார்க்க முடியாது காத்திருக்கிறார்கள்.

பேருந்துகள் எரிக்கப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. பேருந்துகளை அழித்தவர்களின் அடையாளத்தை பொலிஸார் வெளிப்படுத்தினால், அவர்கள் மீது சிவில் வழக்குப் பதிவு செய்து இழப்பீடு பெறலாம்.

சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகளை நடத்தும் திறன் தற்போதைய பொலிஸ் டிஐஜிக்கு உள்ளது. பேருந்துகளை கவிழ்த்த சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.” என்றும் கெமுனு விஜேரத்ன கூறினார்.