நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை!
பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ்.

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆசேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்பு சித்தி பெற்றதன் அடிப்படையில், அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சிப்பெற்று நீதவனாக நியமனம் செய்யப்படவுள்ளார்.
இவர் பண்டாரவளை நீதிமன்ற பிரபல சட்டத்தரணி சிரில் ராஜ் அவர்களின் மனைவியும் பசறை ஜெயந்தி பேக்கரி உரிமையாளரான ராசு புஷ்பராஜ் ஜெயந்தி ராணி தம்பதியினரின் மகளும் ஆவார். இவர் பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதலாவது நீதிபதியும், பெண் நீதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை பசறை தமிழ் தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் உயர்தர கல்வியை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சட்டக் கல்லூரியிலே தனது தொழில்நிலை படிப்பை முடித்தது பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து பத்து வருடங்களாக பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்திலும் தொழில் நியாய சபை நீதிமன்றத்திலும் சேவையாற்றி, மலையக மக்கள் சார்ந்து பல்வேறு வழக்குகளில் சட்டத்தரணியாக கடமை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.