பலதும் பத்தும் : - 22,03,2025 - மோடியின் வருகை குறித்து நாடாளுமன்றில் அநுர!
யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!

மோடியின் வருகை குறித்து நாடாளுமன்றில் அநுர!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாக அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் புதன்கிழமை (19/03/2025) தாக்கல் செய்துள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில்இந்த வேட்புமனுக்கள் புதன்கிழமை (19/03/2025) மாலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானதுபல்வேறு கட்சிகளையும் இணைத்து புதிய ஒரு கூட்டணியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் வடக்குகிழக்கு முழுவதும் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேறு கட்சிகளுக்காக வழக்குகளில் முன்னிலையாகமுடியாது!
இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன்தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறுதெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக் கட்சியினர் நீதிமன்றில்வழக்கு தொடர தங்களை அணுகினால் அது தொடர்பில் வழக்கு தொடர தாங்கள் தயாரா ? என ஊடகவியலாளர்கள் கேள்விஎழுப்பிய போது, நான் ஒரு கட்சியின் செயலாளராக உள்ளமையால் , வேறு கட்சிகளுக்காக இந்த வழக்குகளில் முன்னிலையாக மாட்டேன் எனகூறினார்.
மன்னார் பள்ளமடு விபத்து!
மன்னார் பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி விபத்திற்குள்ளானதுடன், அந்த வாகனத்தில் 4 பேர் பயணித்துள்ளனர்.
இதன் போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,சாரதிஉள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.
காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குமாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில்வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவதுஅமர்வின் போது, சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவி ஒருவர், தமிழில் பட்டப்பின்தகைமைக் கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.
இந்தக் கற்கை நெறியை உயர் பட்டப்படிப்புகள் பீடம் நடத்தியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால் சம்பிரதாயபூர்வமாகஇவருக்கு பட்டம் வழங்கப்பட்டது.