Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சாதாரண தர விஞ்ஞான வினாத்தாள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

.

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த போலிச் செய்தியில் கீழே குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடத்தின் பரீட்சை வினாத்தாள் பாடத்திட்டத்திற்கு அப்பால் வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது, மேலும் வினா முறையும் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக, விஞ்ஞானப் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு தேர்ச்சிக்கும் மதிப்பெண் அளவுகள் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. 65 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு சிறந்த தேர்ச்சி (ஏ) வழங்கப்படும்"

மேலே தெரிவிக்கப்பட்ட விடயம் சமூக ஊடகங்களில் மட்டுமே பரப்பப்பட்டுள்ளது என்பதையும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகமோ அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களமோ அத்தகைய எந்த முடிவையும் எடுக்கவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற போலிச் செய்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கல்வியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

  •