பலதும் பத்தும் :- 24,03,2025, - பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்!
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்.

தென்கொரியக் காட்டுத்தீயில் இலங்கையர் எவருக்கும்பாதிப்பில்லை.
தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புஏற்படவில்லை என்று தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தூதரகம்தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் சுமார் 35,000 இலங்கைத் தொழிலாளர்கள் உள்ளனர். தென்கிழக்குப் பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது ஜப்பான்தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல்.
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்திசெய்வதற்காக இன்று (2025 மார்ச் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படைமரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer வகைக்கு சொந்தமான ‘MURASAME’என்ற கப்பலானது 151 மீற்றர்நீளமும், மொத்தம் 200 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் HAYAKAWA Masahiro பணியாற்றுகிறார்.
மேலும், இந்த போர் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில்உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்திசெய்தபின்னர் ‘MURASAME’ கப்பல் 2025 மார்ச் 23 ஆம் திகதி அன்று கப்பலானது இலங்கையை விட்டு புறப்படவுள்ளது.
பறவைக்காவடி கவிழ்ந்ததில் ஒருவர் காயம்
பொகவந்தலாவை செப்பல்டன் தோட்ட இந்து கோவிலில் வருடாந்திர தேரு திருவிழாவின் பறவைக்காவடி ஏற்றியடிராக்டரின்- டிரெய்லர் 22 ஆம் திகதி மதியம் கவிழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததாக பொகவந்தலாவை பொலிஸார்தெரிவித்தனர். டிராக்டரின் டிரெய்லரில் இணைக்கப்பட்டிருந்த பறவாக்காவடி (தொங்கும் சாதனம்), கூர்முனைகளில் தொங்கியநபருடன் சேர்ந்து, சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது. பின்னர், தாங்கியில் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்டு கோவிலுக்கு ஊர்வலம் அழைத்துச் சென்றனர். டிராக்டர் டிரெய்லர் சமநிலையை இழந்து டிராக்டர் சாலையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகபொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20.40 மில்லியன் கிலோகிராம் தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 39.77 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 1.30 மில்லியன் கிலோகிராம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் இலங்கையிலிருந்து அதிகளவில் தேயிலை இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. அத்துடன் ரஷ்யா இரண்டாவது இடத்திலும், லிபியா 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.