Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அதிகளவிலான மக்கள் பலம் சஜித் பிரேமதாசவுக்கு! தமிழ், முஸ்லிம் வாக்குகள் வெகு விரைவாக ஐக்கிய மக்கள் சக்தியிடம்!

பொது மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து முன் நிற்கும் காரணத்தினால் கிராமப்புற மக்கள் சஜித் பிரேமதாச மீது அசையாத நம்பிக்கை

சஜித் பிரேமதாசவுக்கு அதிகளவிலான மக்கள் பலம்; தமிழ், முஸ்லிம் வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு.

இலங்கையில் அதிகளவிலான மக்கள் பலம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காணப்படுவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அதில் மாகாண மட்டத்தில் மொட்டுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைவடைந்த நிலையில் ஒரே ஒரு தீர்வு தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்ற எண்ணத்தில் இருந்த பலரும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்திக்கு படையெடுத்து வந்த கூட்டம் தற்போது மீண்டும் மொட்டுக்கட்சிக்கும் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தலில் பெற்றுக்கொண்ட 4 இலட்சம் வாக்குகளை 50 வீதமாக அதிகரித்துக்கொள்ள குறைந்தது 70 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறான ஒரு வாக்கு வீதத்தை அவர்களால் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்பதால், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு போதும் அரசாங்க அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ், முஸ்லிம் வாக்குகள் வெகு விரைவாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் திரும்பி வருவதாகவும் அதனடிப்படையில் அனைத்து வாக்குகள் மூலமும் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவு வாக்கு வீதத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

பொது மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து முன் நிற்கும் காரணத்தினால் கிராமப்புற மக்கள் சஜித் பிரேமதாச மீது அசையாத நம்பிக்கை வைத்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி அல்லாதவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் புதிய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அதன் மூலம் மேலும் 20 இலட்சம் வாக்குகளை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.