காமன் கூத்தும் காத்தான் கூத்தும் இலங்கைத் தமிழ் கூத்துகளின் முக்கியமானவை.
காமன் கூத்து மலையக சாதாரண உழைப்பாளி மக்களின் கூத்தானால் காத்தான் கூத்து யாழ்ப்பாண சாதாரண உழைப்பாளி மக்களின் கூத்து ஆகும்

இது இன்னொரு பார்வைஇ காமன் கூத்தும் காத்தான் கூத்தும்.
காமன் கூத்தும் காத்தான் கூத்தும் இலங்கைத் தமிழ் கூத்துகளின் முக்கியமானவை . இவை மிகச் சாதாரண மக் களால் ஆடப்பட்டு வருபவை. மரபு மாறக்கூடாது என்ற வகையில் சடங்கோடு இணைந்தவை அதிலும் காமன் கூத்து சடங்கு அரங்கு ஆகும். காமன் கூத்தின் சிறப்பு யாதெனில் அது ஓர் மக்கள் அரங்காகும். காமன் கூத்து நாளில் அதனை நடத்தும் மக்கள் அனைவரும் அதில் ஈடு படுகின்றனர்இ ஆரம்பம் தொடக்கம் காமனுக்கு இறுதிச் சடங்கு செய்யப் பணம் கொடுத்து அழும் வரை அது மக்கள் அரங்கு பின்னால் விதிக்கப்பட்ட அரங்க விதிகளுக்குள் அதனைக் கட்டுப்படுத்த முடியாது. மக்களோடு இருந்து இணைந்து பார்த்தால்தான் அதனைப் புரிந்து கொள்ள முடியும்இ இந்த அனு பவத்தை நான் கந்தகட்டியாவில் பெற்றேன். ஊரே பங்குகொண்ட கூத்து அது. நான் கூத்துப் பார்த்துகொண்டிருந்தேன் எனக்குத் தெரியாத வீடுகளிலிருந்து எனக்கு அடிக்கடி சுடச் சுடத் தேநீர் வந்து கொண்டிருந்தது நானும் கூத்தின் ஒரு அங்கமானேன். மறுநாள் காமன் தகனதிற்கு அவர்கள் தட்டேந்தி வந்தபோது நான் நவா வீட்டில் காலைத் தேநீர் அருந்திகொண்டிருந்தேன் இருந்தேன்.நந்தான் அன்று இரவு காமனுக்கு வேடம் கட்டியவர் அருமையான பாடகர் வெளியிலே காமனின் மரணச்சடங்கு நடத்த பண்ம் கேட்டுத் தட்டேந்தி நின்றார்கள். நானும் என் பங்கிற்குத் தட்டத்தில் பணம் போட்டேன் நானும் இவ்வாறு காமன் கூத்தின் ஒரு நடிகனானேன் மேடையில் வருவது மாத்திரமல்ல நாடகம்.
காத்தான் கூத்து ஆரம்பத்தில் உடுக்கடி கதையாக இருந்ததுஇ மாரி அம்மன் கோவிலில் ஒரு சடங்கு நிலையில் இருந்தது என அறிகிறோம். பின்னர் இது நாடகமாகிவிட்டது காத்தான் கூத்து காத்தவராயன் நாடகம் ஆகியதும் இங்கு பார்ப்போர் நிகழ்த்துவோர் என இரு நிலையினரும் கூடவே பொழுதுபோக்கு அம்சங்களும் கூடி விட்டன காமன் கூத்தினை பயிற்றுவிப்பவர் வாத்தியார் எனவும் காத்தான் கூத்தினைப் பயிற்றுவிப்பவர் அண்ணாவியார் அழைக்கப்பட்டார் அவர்களே இதில் அதிகாரம் பெற்றவர்கள் என மக்களால் கணிக்கப்படுகிறார்கள் ஆனால் இக்கூத்து ஆற்றுகைகள் பற்றிய மக்களுடைய உளவியல் என்ன? என்பதை துளாவுவது ஒரு சுவாராசியமான ஆய்வாக இருக்கும்.
இது ஒரு ஊகமேஇ இந்த ஊகம் சரியென சரியான கள ஆய்வில் பெறப்படும் தகவல்கள் மூலமே நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும் இது ஒரு பார்வையே தவிர முடிந்த முடிவு என்று யாரும் தயவு செய்து எடுத்துக் கொண்டுவிட வேண்டாம் ஏனென்றால் மரபு சார் சடங்கு சார் கலைகளைப் பற்றி வித்தியாசமாக நாம் சிந்தித்தால் விமர்சனமாக நோக்கினால் அதற்குப் பல்வேறு விதமான வியாக் கியானங்கள் தோன்றியும் விடும் இவ்விரு கூத்துக்களையும் இப்படியும் பார்க்கலாம் என்பதைத் தொட்டுக்காட்டுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காமன் கூத்து - காமன் கூத்து கூறும் உட்பொருள் என்ன.? தவம் செய்துகொண்டிருந்த சிவனை இல்லற வாழ்க் கைக்கு அழைத்து ஒரு பிள்ளை உற்பத்தியாக காமன் அவர் மீது அம்பு விடுகிறான். அது அவரைத் துன்பப்படுத்தும் அம்பு அல்ல. இன்ப வாழ்கைக்கு அழை க்கும் இன்பம் கொடுக்கும் அம்பு. காமன்- ரதி என்ற கற்பனை பாத்திரங்கள் மக்கள் படைத்த பாத்திரங்கள்.விடலைப் பருவமான பதின்ம வயதுப் பாத்திரங்கள் மானுட காதல் விளையாட்டின் அல்லது வாழ்க்கைகையை ருசித்தலின் அடையாளங்கள் அவர்கள் இந்த ருசித்தல் இன்றி மானுட உற்பதியின்றி மனித குலம் இதுவரை தொடர்ந்து வாழ்த்திருக்குமா? தம்வழியில் அந்த மஹாசிவனை வாழ்க்கைக்கு அழைக் கிறான் காமன். சிவனோடு போர் புரிபவனாக அவன் சித்தரிக்கப் படுகிறான் அந்தப் பெரிய மனிதனோடு போர் புரிய முடியுமா? இறுதியில் காமன் எரிக்கப்படுகின்றான். வாழ்க்கைக்கு அழைத்ததனால் மாத்திரம் எரிக்கப்படவில்லை சிவனது மேலாதிக்கம் தன்னிலும் கீழான ஒருதனை சாம்பலாக்கி விடுகிறது .இந்த எரிப்பு சாதாரண மக்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் யாது? காமன் எரிப்பின் மறுநாள் அவனுடைய இறப்பினை நடத்த மக்களிடம் பணம் கேட்டுச் செல்லும்போது. அவர்கள் அதற்கு அள்ளிக் கொடுக்கிறார்கள் அழுது கொண்டு கொடுக்கிறார்கள். காமன் இறப்பை தங்கள் வீட்டின் இழவாக நினைக்கிறாரக்ள் செத்த வீடு கொண்டாடுகிறாரக்ள்.
காமனைத் தம் வீட்டில் வளர்ந்த விடலைப் பையனாக தமது பையனாக அவர்களின் அடிமனது நினைத் ததனால் வந்த அழுகை ஒரு புத்திரசோகம் என்று நாம் ஏன் அதனைக் கொள்ள முடியாது? ஆம் காமனின் இழப்பு அவனது அவர்களது சொந்த வீட்டு இறப்பாக மாறிவிடுகிறது. காமன் கூத்து இங்கே ஆழமான மக்கள் கலையாகவும் மாறிவிடுகிறது .மக்கள் அனைவருமே இங்கு இன்னொரு வகையில் நடிகர்களாகி விடுகிறாரக்ள் பிரதிக்குஇ ஆற்றுகைக்கு அர்த்தம் தருவது யார்? பார்வையாளர் தானே?இங்கே மக்கள் பிரதிக்கு இன்னொரு அர்த்தம் தங்களுடைய பதில் குறிகள் மூலம் தருகிறார்கள். பார்த்தால் சடங்கு போலவும் சிவனைச் சிறப்பிப்பது போலவும் காணப்படும் இந்த கூத்தில் மக்களின் துயரம் பொதிந்து கிடக்கிறதுஅல்லவா? யாராவது ஒரு புத்தாக்க நாடகாசிரியர் காமன் கூத்தில் பாண்டித்தியம் மிகுந்தவர் இதனை அடிப்படையாக வைத்து ஒரு புதிய காமன் கூத்தை தயாரிக்கலாமே.
காமன் கூத்து மலையக சாதாரண உழைப்பாளி மக்களின் கூத்தானால் காத்தான் கூத்து யாழ்ப்பாண சாதாரண உழைப்பாளி மக்களின் கூத்து ஆகும் காத்தான் பிறந்த உடனேயே கழு மரமும் தோன்றி விடுகிறது காத்தானும் கழுமரமும் மனித வாழ்வின் குறியீடுகள் அதனை நாம் விதி என்ற கோட்ப்பாட்டுக்குள் சுருக்கி விடுகிறோம். சாதாரண மக்கள் எவ்வாறு வாழ்க்கையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு அடையாளம் போல எனக்கு காத்தானும் கழுமரமும் எனக்குத் தெரிகிறது.
ஒருவரின் பிறப்பு நிகழ்ந்த அன்றே அவருக்கு மரணமும் உண்டு என்பதனை காட்டும் ஒரு தத்துவக் குறியீடாக இது எனக்கு தெரிகிறது தாயார் எவ்வளவு பிரயத்தனப் பட்டாலும் கடைசியில் காத்தான் கழுமரம் ஏறுகின்றான். கழுமரம் ஏறும் போதுஅவன் பாடும் பாடல்கள் மக்கள் மனதை உருக்குகின்றன. காத்தானெனும் காத்தவராயன் இறக்கக் கூடாது என்ற உணர்வே மக்கள் மனதில் நிறைந்து நிற்கின்றது. ஆனாலும் கதையின் படி அவன் அவன் இறக்கின்றான் ஆனால் அவனுக்கு ஒரு முன் கதை இன்னொரு பின்கதை சிருஷ்டித்து தேவ உலகிலே அவன் இன்பமாக வாழ்வதாக மக்கள் கற்பனை பண்ணுகிறார்கள். மக்களின் வியாக்கியானிப் பாக நாம் இதனை கொள்ளலாம். மனிதர் இறப்பை மனிதர் எதிர்கொண்ட முறை இதில் தெரிகிறது. காமனை தங்கள் அடிமன உணர்வோடு மலையக உழைப்பாளி மக்கள் பார்க்கும் விதம் போலவே காத்தானையும் யாழ்ப்பாண உழைப்பாளி மக்கள் தங்கள் அடிமன உணர்வோடு பார்க்கிறார்களோ என தோன்றுகிறது.
இவ்வகையில் காமன் கூத்து காமனும் காத்தான்கூத்துக் காத்தானும் மக்கள் ஹீரோக்களாக அதாவது நாயகர்களாக மாறி விடுகிறார்கள். காமன் கூத்திலும் சிவன் வருகிறார்இ காத்தான் கூத்திலும் சிவன் வருகிறார். மக்கள் பார்வையில் அவர் அங்கே ஹீரோ அல்லது நாயகன் அல்ல மாறாக கூத்துக்களின் இறுதியில் மரணம் தழுவும்இ காமனும் காத்தானுமே நாயகர்களாகி விடுகிறார்கள். துன்பியல் நாயகர் என இவர்களை நாம் அழைக்கலாம். கிரேக்க நாடகத்தில் மட்டுமா துன்பியல் நாயகன் வருவான் இது நமது மரபில் வரும் துன்பியல் நாயகர் என நாம் கருதலாம் அல்லவா?
காமனும் காத்தவராயன் என அழைக்கப்ப்டும் காத்தானும் விளையாட்டுப் பிள்ளைகள் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் போல் இளைஞர் குறும்பு விளையாட்டுகள் அந்தக் குறிப்பிட்ட வயதில் வாழ்வின் மனிதர் கடக்கும் பகுதி. கண்ணபெருமான் ஏன் மக்கள் மனதில் பதிகிறார் அவர் விடலைப் பருவத்தில் விட்ட குறும்பு விளையாட்டால் தான்.அதனை ஞானிகள் லீலை எனக் கூறி அனுபவிக்கிறாரக்ள். மக்கள் இங்கே காத்தானின் காமனின் குறும்புகளை அனுபவிக்கிறார்கள்.
முருகனை எப்போது மக்கள் அதிகம் ரசிக்கிறாரக்ள் வ்ன் வேலன் வேடன் விருத்தானாகி வள்ளியோடு விட்ட குறும்பு விளையாட்டால்தான் சிறுவர்களின் இந்த்க் குறும்பு விளையாட்டு பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவர்களும் அந்த விளையாட்டை விளையாடி வந்தவரக்ள்தான். காலையில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சட்டத் தரணி ஜோதி குமார் காமன் கூத்து பற்றிக் கூறுகையில் தன்னிடம் ஒரு மலையக இளைஞன் 'சந்தோசமாக வாழ்வை அனுபவித்து மற்றவரை அனுபவிக்க வைத்த அப்பாவி காமனை சிவ்ன் அழித்தது எந்த வகையில் ஞாயம்'
என்று சொன்ன செய்தி கேட்ட பின் அதன் பின்னணியில் நான் வடபகுதில் காத்தவராயன் கூத்தையும் வைத்துப்பார்த்தேன்.அதன் விளைவே இக்கட்டுரை அதில் வரும் காத்தான் ஆரியமாலையில் ஆசை கொண்டு காதலுக்காக ஏங்குபவன். பிற பெண்களோடு உறவாடி அவர்களோடு வாழ்வைத் துய்க்க விரும்புபவன். சாராய பூதியை வென்று சாராயம் குடித்து மகிழ்பவன் மட்டக்களப்பில் காத்தவராயன் சட்ங்கில் பாடப்படும் காத்தவராயன் பாடல்களி ல் அவன் பெண்களிடம் சென்றமை சிலாகிக்கப்படுகிறது விமர்சனமாக அல்ல கொண்ட்டாட்டமாக இந்த மக்கள் கொண்டாட்டட்தை நாம் எப்படி விளங்கிகொள்ளலாம்.
இந்த இரண்டு கூத்திலும் பாண்டித்தியயமுடைய நாடகம் தெரிந்த இளம் தலைமுறையினர் இந்த கருத்துக்களை அடிப்படையாக வைத்து மக்கள் பர்வையில் ஏன் ஒரு புதிய காமன் கூத்தையும் புதிய காத்தான் கூத்தையும் உருவாக்க முடியாது. வேதம் புதுமை செய் என்றான் மஹாகவி பாரதி சாதாரண கூற்றல்ல அது கேள்விக்கு இடம் இன்றிப் போற்றப்ப்படும் வேதங்களையே புதுமை செய் என்ற அந்த மஹாகவிபோல நாமும் மரபைப் புதுமை செய் என்று கூறலாமேஇளம் தலைமுறை சிந்திப்பார்களாக ?