யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை 17 வயது சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை 17 வயது சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜோர்ஜ் ஸ்டீபன் மதிவாணன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (21) அப் பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற சிறுவன் திரும்பி வராததால்இ அப் பகுதி மக்களால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்தே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
மற்றுமெரு சம்பவம். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சுமார் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரியின் தலைமையில் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


