பலதும் பத்தும். 30.11,2025 - நாட்டில் நீடித்து வரும் கடும் மழைவீழ்ச்சி !
யாழில் வாள்வெட்டு!
நாட்டில் நீடித்து வரும் கடும் மழைவீழ்ச்சி
நாட்டில் நீடித்து வரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக, 11 மாவட்டங்களுக்கு அதிகபட்ச மண்சரிவு அபாய எச்சரிக்கையான மூன்றாம் நிலை (சிவப்பு) எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது.
133 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகியன அடங்குகின்றன.
இந்த மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான மற்றும் அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், அதிகாரிகள் வெளியேறுமாறு அறிவுறுத்தினால் தாமதமின்றிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதிக மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு கோபுரங்கள்
நாடு முழுவதும் 3000 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அதன் Base Station உள் நீர் புகுந்து செயழற்றுள்ளது.
போர்கால அடிப்படையில் சீர்செய்வற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் உதவி வழங்கியது
பாகிஸ்தான் கப்பல் இலங்கைக்கு அத்தியாவசிய நிவாரண உதவிகளை வழங்கியது.
உதவி மற்றும் ஆதரவின் அடையாளமாக, பாகிஸ்தானின் PNS SAIF கப்பல், 'தித்வா புயலால்' (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய நன்கொடைகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நிவாரணப் பொருட்கள் இலங்கை கடற்படை மூலம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. இது சவாலான காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை எடுத்துக்காட்டுகிறது.
யாழில் வாள்வெட்டு!
இன்றுகாலை திருநெல்வேலி சந்தை அருகில் இளைஞர் ஒருவரின் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறித்த இளைஞர் கால் துண்டாகி ஆபத்தான கட்டத்தில் பொலீசாரால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையிர் சேர்ப்பு. மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பயங்கரமான மண்சரிவு
வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவில் ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டதும் இராணுவத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விரைவாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த நடவடிக்கைகளின்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மெக்சிகோ மற்றும் ஆர்ஜென்டீனாவின் பெண்கள் மூவர் உட்பட சுமார் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது சமரவீரபுர பள்ளிவாசலில் தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பதுளை, கண்டி உயிரிழப்புகள்
பதுளை, கண்டியில் 123 உயிரிழப்புகள்b158 பேர் மாயம்
நாடுமுழுவதும் மரணித்தோர் எண்ணிக்கை 193 ஆக உயர்வு.
228 பேர் மாயம்
24 பேரின் சடலங்கள் - 45 பேர் காணாமல் போயிருக்கலாம்!
கண்டி மாவட்டத்தின் ரம்புகேவெல மற்றும் சரசவிகம பகுதிகளில் ஏற்பட்ட பெரிய மண்சரிவில் இதுவரை என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
ரம்புகேவெலவின் முதுனேகட பகுதியில் காணாமல் போன 43 பேரில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சரசவிகம பகுதியில் மண்சரிவில் புதையுண்ட வீடுகளிலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மூதூரில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்கள்!
வெள்ளம் காரணமாக மூதூரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன .பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளமையினால் இடப் பெயர்வு விபரங்களை அறிய முடியாதுள்ளது.
தோட்டப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்குண்ட பலர் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் படகுமூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
மூதூரில் உள்ள வீடுகள் வயல் நிலங்கள் ,நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன .
இடடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான ஏற்பாடுகளில் மூதூர் பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது .
அதைவேளை அதிக வெள்ளம் காரணமாக திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
மன்னாரில் பெரும் இழப்பு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள்.
சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நானாட்டான், மடு, மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


