பலதும் பத்தும். 06.12.2025 - அனர்த்த எச்சரிக்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு !
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
- தான்சானிய நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் சம்பவ இடத்திலேயே பாதுகாப்பாக நடந்ததாகவும்இ தாயும் சேயும் நீர்கொழும்பு மருத்துவமனையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 607 ஆக அதிகரிப்பு: காணாமல் போனோரின் எண்ணிக்கை 214 ஆக பதிவு: அனர்த்த முகாமைத்துவ நிலையம்
- மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர்.
இவ்வுலர் உணவுப் பொருட்களை சிறைக் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கினர்.
அதனை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் நேரில் சென்று கையளித்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ரத்நாயக்க உள்ளிட்ட ஏனைய உத்தியோதர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
அண்மையில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை அடுத்து தங்களால் முடிந்த உதவிகளை பலரும் பல பாகங்களிலிருந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய ரெஹான் ஜயவிக்ரம!
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும்இ வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில்இ கட்சியின் தற்போதைய கொள்கைகள் குறித்து தான் திருப்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவொரு சுயநல அரசியல் நடவடிக்கையல்ல என்றும்இ தாய்நாட்டிற்கு முன்னாலுள்ள குறுகியஇ நடுத்தர மற்றும் நீண்ட கால சவால்களை வெற்றிகொள்வதற்காகஇ தனிப்பட்ட நலன்களைப் புறந்தள்ளி எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் என்றும் ஜயவிக்ரம தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
- வெள்ள நிவாரண உதவிகள் - துரிதப் பொறிமுறை அவசியம்
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில்இ அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (டிசம்பர் 5) மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி மற்றும் முறாவோடை பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்னர் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன்இ அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரண உதவிகளும் பொருட்களும் வழங்கப்பட்டன. இது அவர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது அத்தியாவசிய நிவாரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால்இ நிவாரண உதவிகள் மக்களைச் சென்றடைவதில் கால தாமதம் ஏற்படுவதாகக் அவர் சுட்டிக்காட்டினார்.
நிவாரணங்களை வினைத்திறனாகக் கையாளவும்இ பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாகச் சென்றடையச் செய்யவும்இ தொடர்புடைய அரச ஊழியர்களைக் கொண்டு துரிதமான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உடனடியாக உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
- அனர்த்த எச்சரிக்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு
தமிழும்இ சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும்இ அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழில் அவை வெளிவருவதில்லை என்று இலங்கை தமிழரசுக் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


