Breaking News
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு தூக்கு தண்டனை!
நெல்லையில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, தூக்கு தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 14 வயது சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்ததாக, 2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த நிலையில், வழக்கு முழுவதும் விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவரது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.


