Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கார்த்திகைப் பூ - கால்களுக்கு அணியும் பாதனைகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது.- பொன்னுத்துரை ஐங்கரநேசன்.

தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர்.

பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார்.

தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதனைகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது.

குறித்த விடயமானது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே பார்க்கிறேன். குறித்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை மீள பெற வேண்டும். அத்துடன் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார்.