இரத்தச் சிவப்பணுக்கள் குறைகிறதா? கூடுகிறதா? உங்கள் உடல் சொல்லும் ரகசியம் என்ன?
நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்குத் தேவையான வி ட்டமின் பி12 குறைவதாலும் சிவப்பணுக்கள் குறையும்.
இரத்தச் சிவப்பணுக்கள் குறைகிறதா? கூடுகிறதா? உங்கள் உடல் சொல்லும் ரகசியம் என்ன?
முழு இரத்தப் பரிசோதனையில் மிக முக்கியமாக கவனிக்கப்படுவது ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை தான். எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகி, உடல் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் இந்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, நமது ஆரோக்கியத்தைக் காட்டும் மிகச்சிறந்த கண்ணாடியாகும்.
ஆண்களுக்கு ஒரு கன மில்லிமீட்டருக்கு 4.6 முதல் 6.2 மில்லியன் வரையிலும், பெண்களுக்கு 4.2 முதல் 5.4 மில்லியன் வரையிலும் இருப்பது இயல்பான அளவாகும். இந்த அளவு மாறும்போது நமது உடல் சில முக்கிய சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது.
எண்ணிக்கை இயல்பை விடக் குறையும்போது, அது 'இரத்தச் சோகை' பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும். இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்:
ஊட்டச்சத்துக் குறைபாடு: இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி9 (ஃபோலிக் அமிலம்) குறைபாடு முக்கியக் காரணமாகும்.
வி ட்டமின் பி12 பற்றாக்குறை: நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்குத் தேவையான வி ட்டமின் பி12 குறைவதாலும் சிவப்பணுக்கள் குறையும். வயதாக ஆக, வயிற்றில் அமிலத்தன்மை குறைவதால் உணவிலிருந்து இந்தச் சத்தை உடல் உறிஞ்சுவது கடினமாகிறது.
பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கு போன்ற தொடர்ச்சியான இ ரத்த இழப்பும் ஒரு காரணமாக அமைகிறது.
எச்சரிக்கை அறிகுறிகள்: வழக்கத்திற்கு மாறான சோர்வு, அதிக தூக்கம், மூச்சுத் திணறல், தலைவலி, தலைசுற்றல், கவனச் சிதறல் மற்றும் கை கால்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சிவப்பணுக்கள் அதிகரித்தால் ஆபத்தா?
சிவப்பணுக்களின் எண்ணிக்கை 7 முதல் 10 மில்லியன் என அபரிமிதமாக அதிகரிப்பதும் ஆபத்தே! இதனை மருத்துவ மொழியில் 'பாலிசைதீமியா' என்று அழைக்கிறார்கள்.இது மரபணு சார்ந்த இரத்த நோயான 'வாக்வெஸ்' (Vaquez) நோய், நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு அல்லது பிறவியிலேயே உள்ள இதயக் கோளாறுகள் போன்றவற்றின் வெளிப்பாடாக இருக்கலாம்.
இவை மட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து வறண்டு போவது மற்றும் அதிகப்படியாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிக்கலாம்.
உங்களின் இரத்தப் பரிசோதனை முடிவுகளில் சிவப்பணுக்களின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, நீங்களாகவே ஒரு முடிவுக்கு வராமல் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது.


