Breaking News
சுகாதாரப் பரிசோதனையில் சாரதிகள், வர்த்தகர்கள்,போக்குவரத்து சபை ஊழியர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,

அதிக வேகத்தில் செல்லும் அரச பேருந்து சாரதிகள்; அதிஉயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்.
குளியாப்பிட்டி சுகாதார அமைச்சு அலுவலகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையில் குளியாப்பிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள், வர்த்தகர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு அதிக ஆபத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் சுகாதார துறை ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த அதி உயர் இரத்த அழுத்தம் காரணமாக பேருந்தை கூட மிகவும் வேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச்செல்வதாகவும் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியிலுள்ள அனைத்து இலங்கை அரச போக்குவரத்து ஊழியர்களுக்கும் மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகளை வழங்குவதற்காக விரைவில் மருத்துவ கிளினிக்கை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.