கம்யூனிஸ்டுகள் ஈழ இன அழிப்பின் போது தமிழர்களின் பக்கம் நிற்காமல் போனதும், காஸ்ட்ரோ வெவ்வேறு காலகட்டங்களில் ஜெயவர்த்தனே முதல் சந்திரிகா வரை கட்டித் தழுவியதும்!
ஐநாவின் ஒரு மனித உரிமை அமர்வில் சாவேஸின் வெனிசுவேலா சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு கடும் எதிர்ப்பு - ஐரோப்பாவில் இயங்கும் RSTE
உலகெங்கும், ஜெர்மன் பொருளாதார அறிஞர் மார்க்சீன் வழி வந்தவர்கள் அரசியல் வழி, படை வழி மட்டுமல்லாது சித்தாந்த ரீதியாகவும் தோல்வியடைந்து
சமூக/உலக புரட்சிக்காக தானாய் கனிந்த வாய்ப்புக்களை கூட தீவிர வலதுசாரிகளிடம் (far right) பரிதாபகரமாக கையளித்து வருவது விவாதம் ஆகியிருக்கும் வேளையில்..
அண்ணன் தமிழரசன் அப்துல்காதர் கியூபா கம்யூனிஸ்டுகளும், மற்ற தென்னமெரிக்க கம்மிக்களும் ஈழ இன அழிப்பின் போது தமிழர்களின் பக்கம் நிற்காமல் போனதையும்,
காஸ்ட்ரோ வெவ்வேறு காலகட்டங்களில் ஜெயவர்த்தனே முதல் சந்திரிகா வரை கட்டித் தழுவியதையும் பற்றி குறிப்பிட்டு இந்த படத்துடன் விமர்சித்து இருந்தார்.
மிக அண்மையில் கூட தோழர் நல்லக்கண்ணுவின் மரணமும், இனப்படுகொலையின் போது அவரின் செயல்பாடுகளும் வெவ்வேறு இடங்களில் இதே விவாதத்தை தூசு கிளப்பி இருந்தன.
இந்திய ஒன்றியத்தின் சூழலில் மாவோயிஸ்ட்டுகள் வீழ்ந்து/பின்னடைந்து வரும் முக்கியமான வராலாற்று காலகட்டத்தில் இதை விவாதிப்பது அவசியமாகி இருக்கிறது.
அண்ணன் தமிழரசன் அப்துல்காதர் குறிப்பிடும் அந்த நிகழ்வுகளுக்கு பின்னே மிக முக்கியமாக இருப்பது...
சிபிஐ/எம் என்கிற இந்திய செங்காவிகளின் மார்க்சீய மனுவாத கோட்பாடாகும். 60'வதுகளின் முன்பகுதிவரை இந்திய ஒன்றியத்தை முழு நாடக அங்கீகரிக்காது,
அரை-காலனிய, அரை-நிலப்பிரபுத்துவ ஏற்பாடு என்று வரையறுத்து வந்தவர்கள் எப்போது சோவியத்துகளின் அழுத்தத்தால் இந்தியாவை சுதந்திர நாடு என்று அறிவித்தார்களோ
அது முதலே ஒன்றியத்தின் தேசிய இனங்களின் மீதான ஆரியத்துவாவின் காலனிய கோட்பாடே தனது கோட்பாடும் என்று வெளிப்படையாக அறிவிக்காமல் கமுக்கமாக ஏற்றுக்கொண்டார்கள் இவர்கள்.
அதுதான் பேரறிஞர் குணா, புலவர் கலியபெருமாள், ஐயா மணியரசன் போன்ற கம்யூனிச போராளிகளை வெவ்வேறு காலகட்டங்களில் வெளியேற வைத்தது.
கூடுதலாக, டெல்லியின் அரசியல் வானில் left intelligentia என்று அறியப்பட்ட இந்து ராம் போன்ற பலரின் ஆரிய இனவாத பின்னணியும்.
மேற்கத்திய/ கீழைத்தேய/ லத்தீன் அமெரிக்க நாடுகளை துரோகப்பாதைக்கு இழுத்துச் சென்றன.
அகிலம் இருந்தபோதும், அதன் பின்னரும் புதிய எதார்த்தங்களுக்கான வெளியுறவுக்கொள்கைகளை செதுக்கும்போது (தூர நாடுகள்)அப்பகுதிகளின்
கம்யூனிஸ்ட் கட்சிகளை கலந்தாலோசிப்பது வழமையான பண்பாக இருந்து வருவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டது இந்த இனவாத கும்பல்.
ஐநாவின் ஒரு மனித உரிமை அமர்வில் சாவேஸின் வெனிசுவேலா சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து
ஐரோப்பாவில் இயங்கும் RSTE போன்ற ஈழ இடதுசாரி மாணவ அமைப்புக்கள் காட்டமாக கடிதம் எழுதியபோது சூசகமாக தவறாக அறிவுறுத்தப்பட்டு விட்டோம் என்று பதிலளிக்கப்பட்ட்டதாக எனக்கு நினைவு.
இந்திய செங்காவிகள் இந்து ராம் போன்ற செந்தோல் போர்த்திய பச்சோந்திகளை உரம் போட்டு வளர்ப்பதே இந்த புரட்சிகர காட்டிக்கொடுத்து வேலைகளுக்குத்தான்.
அதற்காகத்தான் ஸ்ரீலங்கா ரத்னா.மேலும், இந்திய செங்காவி கட்சிகள் தங்களது வருடாந்தர மாநாடுகளுக்கு சிங்கள இனவெறி கம்மிக்களை அழைப்பதும், அவர்கள் கலந்துகொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது.
அந்தவகையில் மாவோவியர்களை பாராட்டலாம், காம்போஸா போன்ற தெற்காசிய மாவோவிய கூட்டமைப்பில் சிங்கள கம்மிக்களோடு உறுப்பினர்களாக இருந்தாலும் சிங்கள இனவெறியை தொடர்ந்து கண்டிக்கிறார்கள்
அதேவேளை, அண்ணன் மேற்கோள்காட்டிய நாடுகளின், சோசலிச நாயகர்களின் புரட்சிகர IQ'வும் மெல்ல மெல்ல மழுங்கி வருவதும் இதற்கு காரணமாக அமைவதோடு மட்டுமன்றி, அது அவர்களையும் மண்ணை கவ்வ வைத்தது.
இவர்களின் புரட்சிகர IQ வறட்சி கண்டதற்கு ஒரு உதாரணம்: அன்று அவர்களோடு சர்வதேச அகிலத்தில் உறுப்பினராக இருந்த ஜேவிபி'யை வன்முறையாக அழித்தொழித்த அதே ஜெ ஆர் ஜெயவர்த்தனேவைத்தான் கட்டி அணைக்கிறார் காஸ்ட்ரோ.
அதேவேளை, இந்த தத்துவம் வறண்டவர்களை மேற்கோள்காட்டி எதிர்வினையாக தேசிய இன விடுதலை அரசியலை வெறும் பாப்புலிஸ்ட் மூவ்மென்ட்டாகவோ, நிரந்தர கோட்பாடற்ற அரசியல் தற்காலிகள் ஆகவோ, வலதுசாரி அரசியலாகவோ முன்னெடுப்பது அழிவுப்பாதைக்கான குறுக்கு வழியாகும்.
தமிழர்களின் இயல்பான இடதுசாரி மரபில் வந்த இருபெரும் அமைப்புகளான வடக்கே தமிழ்நாடு விடுதலைப்படை மற்றும் தெற்கே தமிழ்நாடு மீட்சிப்படை வழி வந்தவர்களோடும்,
அத்தகைய, அதையொத்த சிந்தனைப்பள்ளி தோழர்களோடும் உரையாடல் நடத்தி, விவாதித்து இந்த சூழலை விளங்கிக்கொள்வதும், எதிர்கொள்வதும் எதிர்கால அரசியலுக்கு அவசியம் ஆகும்!
முகநூல் பதிவு


