ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் புதிய நகர்வு. வேட்பாளர் யார், கட்சியின் ஆதரவு யாருக்கு?
ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வரும் நிலை

ஜனாதிபதி தேர்தலில் விமல்-உதய கம்மன்பில உருவாக்கிய கட்சியின் ஆதரவு யாருக்கு?: ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் புதிய நகர்வு.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, பேராசிரியர் சன்ன ஜயசுமண உள்ளிட்டவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சர்வ ஜனபலய கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்சி கை விரல் ரேகையை சின்னமாகக் கொண்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு சர்வ ஜனபலய என புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து ஒரு குழுவாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
இவ்வாறான பின்னணியில், ரணிலின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மட்டுமே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும் எனவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அதிகமாக காணப்பட்டு வருகிறது.