இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலக மகளீர் தின நிகழ்வு!
,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலக மகளீர் தின நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளீர் தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த ஆண்டு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு "பெண்கள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்கள்: சூறாவளி தித்வாவிலிருந்து கறறுக்கெண்ட பாடங்களுடன் உரிமைகள் அடிப்படையிலான பதிலளிப்பு" என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த கருப்பொருள், பேரிடர்களின்போது மனித உரிமை தாக்கங்களை பாலின-பதிலளிப்பு கண்ணோட்த்தின் மூலம் ஆராயவும், பேரிடர் சூழல்களில் பெண்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்களை ஒப்புக்கொள்ளவும் அவசரத் தேவை ஒன்று உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் "டித்வா புயலின் தாக்கமும் பெண்களின் பொருளாதார பாதிப்புகளும்" எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல்துறை விரிவுரையாளர் சுவேதா பிரதீபன் அவர்கள் சிறப்புரையாற்றியதுடன், டித்வா புயலின் கிளிநொச்சி மாவட்ட பாதிப்புகள் குறித்து தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சுபாஜினி அவர்களும் டித்வா புயலின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய மனித உரிமை அலுவலர் குமுதினி சேவியர் அவர்களும் உரையாற்றினார். மேலும் டித்வா புயலின் தாக்கத்தினால் சவால்களை சந்தித்த மாறுவலுவுடையோர், பெண்கள் தலைமையக குடும்ப பெண்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆகியோரது அனுபவபகிவுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


